(Reading time: 17 - 34 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

அதன் பிறகுதான் தாத்தாவிற்கு அடிபட்டது தெரிந்தது. தன்னிடம் ஏன் சொல்லவில்லை என்று சண்டையிட்டாள்.

"இப்ப எல்லாம் சரியாயிடுச்சுடா. எல்லாம் மாப்பிள்ளையோட கைராசி."

இப்போதுதான் மாப்பிள்ளை என்று பேச்செடுக்கிறார்கள்.

"மாப்பிள்ளையா?" அதற்குள் முடிவே செய்துவிட்டார்களா?

"ஆமாம்மா. அதற்காகத்தான் காத்துக்கிட்டிருக்கோம்."

"தாத்தா இத்தனை சீக்கிரம் என்னை வீட்டை விட்டு விரட்ட நினைக்கறீங்களே. நான் இப்பதானே வந்திருக்கேன்."

"என்னம்மா பண்றது? உங்களோட ஜாதகம் அப்படியிருக்கே?"

"காப்பு கட்டியிருக்கு. திருவிழா முடியற வரைக்கும் கல்யாணத்தைப் பத்தி பேச வேண்டாம்னு எங்ககிட்ட சொல்லிட்டு நீங்க என்ன பண்றீங்க?" என்று கடிந்தவாறே வந்தார் வேதாம்பாள்.

"அது ஒன்னுமில்லை வேதா." என்று சிரித்தவாறே அசடு வழிந்தார்.

"கந்தசாமி. ஊரே உன்னைப் பார்த்து நடுங்குது. நீ என்ன ஆத்தாவைப் பார்த்து நடுங்கறே?"

"என்னம்மா பண்றது? வெளியில் புலியா இருந்தாலும் வீட்டில் எலிதானேம்மா. சரிம்மா நீங்க போய் சாப்பிடுங்க."

அறைக்குச் செல்லும் வழியில் தாத்தா மாப்பிள்ளை என்று சொன்னாரே? யாராக இருக்கும் என்ற யோசனை வந்தது?

எந்தக் கழுதையாக இருந்தாலும் கழுத்தை நீட்டுகிறேன் என்றுவிட்டு யார் என்று கேட்க மனம் வரவில்லை.

அவள் இதுவரைக்கும் திருமணத்தைப் பற்றியும் நினைக்கவில்லை. ஆனால் தாத்தா மாப்பிள்ளை என்று சொன்னதும் ஏன் மனம் இப்படி அடித்துக்கொள்கிறது என்று தோன்றியது.

எப்படியும் திருவிழா முடிந்ததும் தெரிந்துவிடப்போகிறது. தன் மனதை மறைத்துவிட்டு தோழிகளுடன் திருவிழாவில் மகிழ்ச்சியாக கலந்துகொண்டாள். இரண்டு வருடங்களாக அவள் இல்லாமல் களையிழந்து போயிருந்த வீடு இப்போது அவள் வந்ததும் விழாக்கோலம் பூண்டது.

திருவிழா முடிந்துவிட்டது. விரைவில் மகாலட்சுமியின் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கும் வரவேண்டும் என்று சொல்லி மகாலட்சுமியின் தோழிகளை அவரவர் வீட்டில் விடுவதற்கு ஏற்பாடு செய்தனர்.

அப்போதுதான் அவளது தந்தை யார் மாப்பிள்ளை என்று சொன்னார். அதைக் கேட்டதும் அவள் அதிர்ந்துபோனாள். இத்தனை நாட்களும் மனதில் இருந்த துடிப்புக்கான காரணம் இப்போது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.