(Reading time: 17 - 34 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

சரி. லட்சுமி வந்தா தாத்தாவுக்கு அடிபட்டதை ஏன் என்கிட்ட சொல்லலைன்னு கோபப்படுவாளே?"

"சொன்னா லட்சுமிம்மாவால் தாங்கிக்க முடியாதேப்பா. இப்ப என்ன? நான்தான் குணமாகிட்டேனே. என் பேத்தி வரும்போது நான் ஓடிப்போய் வரவேற்பேனே?"

அவரால் உடனடியாக எழுந்து நடக்க முடியுமா? என்ற கவலை ராமச்சந்திரனுக்கு இருந்தது. மகாலட்சுமி தாத்தா மீது உயிரை வைத்திருக்கிறாள். அவருக்கு ஒன்றென்றால் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது.

அவள் வந்து என்ன சொல்லப் போகிறாளோ? என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தேர்வுகள் முடிந்துவிட்டன.

தோழிகள் அவள் ஊருக்கு வருவதாகக் கூறினார்கள். இந்த மாதத்தில் அவர்கள் ஊர் கோவில் திருவிழா நடக்கும். அதற்கு வந்துவிட்டு அப்படியே ஊருக்குச் செல்வதாக ஏற்பாடு.

பகலில் ரயிலில் செல்ல வேண்டும் என்று தோழிகள் விரும்பியதால் அவள் அதற்கு ஒத்துக் கொண்டாள்.

சாந்தாம்மாவிற்கு அவர்களைப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற வருத்தம்தான். அவள் பாசத்துடன் வழியில் சாப்பிடுவதற்கு கட்டிக்கொடுத்துவிட்டாள். தோழிகள் அரட்டையடித்துக்கொண்டு கலகலப்புடன் பயணித்தனர்.

இடையில் ஒரு ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும்போது தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக மகாலட்சுமி இறங்கினாள். மீண்டும் வண்டியில் ஏறும்போதுதான் அவனைக் கவனித்தாள்.

ஏன் போகும் இடமெல்லாம் இவன் வருகிறான்?

ஊரில் அவர்களை அழைக்க கார் வந்திருந்தது. அவள் தன் தோழிகளுடன் வருவதாகக் கூறியிருந்தாள்.

காரை விட்டிறங்கிய அவளை வரவேற்க குடும்பமே வந்து காத்திருந்தது. அவள் கண்கள் தன் தாத்தாவை தேடின.

ஆரத்தி எடுத்ததும் அவளை அணைத்துக் கொண்டாள் வளர்மதி.

"எப்படிடா இருக்கே?" அவள் என்றுமில்லாமல் தன் தாயிடம் இந்த அன்பைக் காண்கிறாள்.

தந்தையின் பார்வை அவளை பாசத்துடன் வருடின. அவளது தோழிகளுக்கு வீட்டைப் பார்த்ததும் இத்தனை பெரிய குடும்பத்தில் பிறந்தவள் தங்களுடன் எளிமையாகப் பழகினாளா? என்று ஆச்சர்யமாக இருந்தது. வீடே அரண்மனை போன்று இருந்தது.

சுகன்யா எதற்காக அந்த வீணாவிடம் சண்டைக்குச் சென்றாள் என்று இப்போது மற்ற தோழிகளுக்குப் புரிந்தது.

இந்த வீட்டின் இளவரசியை அவள் குறைத்துப் பேசுவது பொறுக்காமல் வீணா அவளிடம் மல்லுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.