(Reading time: 16 - 31 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

ஏன்... ரோபோட் எப்படி இருக்கும். அது என்னை மாதிரியே இருக்குமா என்றாள்.

முடியலப்பா... நீ வேற ஏதாவது கிரகத்தில் இருந்து இங்க வந்துட்டியா.. என்ன கேட்டாலும் வித்தியாசமா பதில் சொல்ற...

வேறு எந்த கிரகத்திலும் மனிதர்கள் வாழவில்லை, வேறு கிரகத்தில் இருந்து வருவதாக சொன்னால் நீ நம்பி விடாதே சரியா என்றவள் நான் என் ஊர்ல இருந்து தான் இங்க வந்திருக்கேன் அவ்வளவுதான் என்று சொல்ல ராகவ்விற்கு விட்டால் போதும் என்று ஆகிவிட்டது.

நீ என்னைப் பற்றியே கேட்கிறாயே... உன்னை பற்றி சொல்லு..

என் பேரு ராகவேந்திரன் ஷர்மா. ஷர்மா என் அப்பாவோட பெயர் ஷர்மா ஃபுட் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் பெரிய கம்பெனியை அப்ப நடத்திட்டு வராரு அம்மா புஷ்பா. டாக்டரா இருக்காங்க. ஒரு தம்பி ஒரு தங்கச்சி. பாட்டியும் எங்க கூட இருக்காங்க.

சித்தப்பா சித்தி ரெண்டு பேரும் மும்பையில டாக்டரா இருக்காங்க. நான் சாஃப்ட்வேர் கம்பெனி நடத்திட்டு இருக்கேன் அப்பா பேர்ல போய்கிட்டு இருக்கு.

ஓ... சின்ன வயசுல இருந்து இந்த ஸ்கூல்ல தான் படிக்கிறியா... உனக்கு பிரண்ட்ஸ் யாரும் இல்ல போல.

இல்ல நான் ஐந்தாம் வகுப்பில் இருந்து தான் இங்கு படிக்கிறேன். ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறாங்க. நிறைய பேர் என்கிட்ட இருக்கிற பணத்துக்காகவே என்னை தேடி வருவாங்க. அதனால ரொம்ப பழகுவது இல்லை.

பணத்தை வைத்து எல்லாம் சாதிக்க முடியுமா என்ன...

என்ன இப்படி கேட்டுட்ட... பணம் இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது

எனக்கு இந்தப் பணத்து மேல எல்லாம் நம்பிக்கை இல்லை. தாத்தா அடிக்கடி சொல்லுவார். உனக்காக நீ வாழனும்னு. ஆனால் எனக்கு நான் என்ன செய்யணும் னு தெரியல என்று கேட்டதற்கு நீ வளர்ந்த பிறகு அதை சொல்றேன் என்று தாத்தா சொன்னார். ஆனால் சொல்லாமலேயே இறந்து போயிட்டாரு. இப்ப நான் என்ன செய்யணும் கூட எனக்கு தெரியல என்றவள் சரி அத விடு போர்த் ஸ்டாண்டர்ட் வரை எங்க படித்தாய்.

வேற ஏதோ ஒரு ஸ்கூல்ல படிச்சசதா அப்பா சொன்னாங்க.

ஏன் ..உனக்கு ஞாபகம் இல்லையா

இல்லை. சின்ன வயசுல நடந்த ஒரு ஆக்ஸிடெண்ட்ல எனக்கு பழசெல்லாம் மறந்து போயிடுச்சு. அதனால தான் என்ன புதுசா இந்த ஸ்கூல்ல வந்து சேர்த்தாங்க.

பாவம் தான் நீ... உனக்கு பழைய விஷயங்கள் ஞாபகம் வரவே செய்யாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.