(Reading time: 16 - 31 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

தெரியல ... உங்க அம்மா அப்பா பெயர் என்ன.

தெரியல. ஆனா தாத்தா சுரேந்தர் என்று சொல்லி இருக்காரு அம்மா பெயர் சுமித்ரா.

அவங்க எப்படி இருப்பாங்கனு உனக்கு தெரியாதா.

தெரியாது.

தாத்தா கிட்ட நீ கேட்டதில்லையா.

ஆரம்பத்துல கேட்டிருக்கிறேன். ஆனால் தாத்தா நீ பெரிய பொண்ணானதும் தெரிஞ்சுக்குவ. இப்போ நான் என்ன சொன்னாலும் அதை மட்டும் கவனமாக கேளு என்று சொல்லிட்டாரு. அதனால நானும் கேட்டதில்லை.

உன் தாத்தா நல்லவரா... கெட்டவரானே தெரியவில்லையே என்றவன் அப்படி உன் தாத்தா உனக்கு என்ன எல்லாம் சொல்லித் தந்திருக்கிறார்.

மனுஷங்களோட மனசு எப்படி இருக்கும் எண்ணங்கள் எப்படி இருக்கும் சொல்லித் தந்திருக்கிறார். சிலம்பாட்டம் வில்வித்தை அம்பு எய்தல் கராத்தே பல விஷயங்களை சொல்லி தந்திருக்கிறார்.

நாட்டு வைத்திய முறைகள் பற்றி கூட நிறைய சொல்லித் தந்திருக்கிறார். சின்ன வயசுலருந்தே ஹாஸ்பிடலுக்கு நான் போனது இல்லை. இங்க வந்த பிறகுதான் மற்ற பிள்ளைகளை கூட்டிப் போறபோது பார்த்திருக்கிறேன்.

உன்னை பார்த்தா ரொம்ப வித்யாசமா இருக்கு என்றவன் 12 முடித்த பிறகு என்ன பண்ண போற.

தெரியல. எப்போ என்ன பண்ணணுமோ அப்போ அது நமக்கு தெரியவரும்னு தாத்தா சொல்லி இருக்காங்க.

உன் தாத்தா உன்னை நல்லா கெடுத்து வைத்திருக்கிறார். இனி நான் சொல்றதை நீ கேளு என்றவன் கேட்பியா என்றான்.

ம்ம் என்று தலையசைத்தாள் பூங்குழலி.

உன்னோட பாட புக் எடுத்து படி. அது எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணி எழுதி நல்ல மார்க் எடுத்தா தான் நீ நல்ல காலேஜ்ல சேர்ந்து படிக்க முடியும். உன்னோட லைஃப் நல்லா இருக்கும். அதனால இனி நீ படிக்க ஆரம்பிக்கனும் சரியா..

ம்ம்... உன்கிட்ட ஒன்னு கேட்கவா

கேளு...

எனக்கு உன்னை இதுக்கு முன்னால பார்த்த மாதிரியே தோணுது. நீ என்ன பார்த்து இருக்கியா.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.