(Reading time: 16 - 31 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

தெரியும் சார்... ஆசிர்வாதம்

அந்த ஊர்ல உள்ளவர்களிடம் ஆசீர்வாதம் பற்றி விசாரி. அவர் எங்கே இருக்கிறார் என்று அவரை பற்றி ஏதாவது தெரியுமானு பாரு.

யாருக்கும் அவரை பத்தி சரியாக எந்த ஒரு தகவலும் தெரியல சார். ஆனால் விசாரித்ததில் அவர் ஏதோ ஒரு அனாதை ஆசிரமத்தில் வேலைக்கு சேர்ந்ததாக சொல்லி இருக்காரு. எந்த ஊரு எந்த இடம் இது பற்றி யாருக்குமே எதுவுமே தெரியல.

ம்ம்ம்...

ஆனால்...

என்ன சொல்லு...

சார்.. அந்த பெரியவருக்கு அவரோட பிரண்டு அந்த ஆசீர்வாதம் மாதமாதம் பணம் அனுப்பி வைக்கிறார். விசாரித்து பார்த்ததில் சென்னை என்று மட்டும் தெரிந்தது.

சரி இதுக்கு மேல எல்லாம் நான் பாத்துக்குறேன்...

அந்தப் பொண்ணு பெயர் ஏதாவது தெரிந்ததா...

இல்லை சார்... அந்த பொண்ண பத்தி எதுவுமே தெரியாது.

ஓகே சரி... நீ தொடர்ந்து அங்க இருந்து மத்த காரியத்தைக் கவனிக்க சொல்லு. நான் பாத்துக்குறேன்.

சரிங்க சார் என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டான்.

பாஸ் உடனடியாக தன் அண்ணனுக்கு தகவல் தெரிவித்ததோடு சென்னையிலுள்ள தன் ஆட்களிடம் ஆசிர்வாதம் பற்றி விசாரிக்கவும் சொன்னான்.

மீண்டும் தன் அண்ணன் அழைப்பதை பார்த்ததும் வேகமாக அழைப்பை ஏற்று காதில் பொருந்தியவன்

சொல்லுங்கண்ணா

.....

சரி அண்ணா நான் பார்த்துக் கொள்கிறேன்.

......

சரி அண்ணா..... அண்ணா... எனக்கு ஒரு சந்தேகம். கேக்கலாமா

....

அண்ணா அந்த பொண்ணோட பெயர் என்னன்னு சொன்னீங்கன்னா அதை வைத்து ஸ்கூல்ல தேடி பார்ப்பாங்க.

.....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.