(Reading time: 16 - 31 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

சரி சரி உங்க பிரண்டு பேரு.

அவன் பெயர் ஆசிர்வாதம்.

சரி தாத்தா. அந்த பொண்ண கூட்டிட்டு பக்கத்துல இங்க தான எங்கேயாவது இருந்திருப்பார். நீங்க ஒரு நாள் கூட பார்த்ததில்லையா.

ஏதோ ஒரு ஊரு பேர கூட சொன்னான். நினைவில் இல்லை.. பொண்ணு ரொம்ப ஆபத்தான நிலைமையில் இருக்க மாதிரி தெரிஞ்சது. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயி வைத்தியம் பார்க்கலாம்னா பணம் கிடையாது. அதனால அந்த சாமியார் கிட்ட கூட்டிட்டு போனான். அவர் எதுவும் மூலிகை வைத்தியம் பண்ணுவார் என்று சொல்லி கூட்டிட்டு போனான். அதுக்கு பிறகு திரும்பி வரவே இல்லை.

சரி பெரியவரே நீங்க ஓய்வு எடுங்க. ஏதாவது உதவி வேணும்னா என் பையன் கிட்ட சொல்லி விடுங்கள் என்று சொல்லி விட்டு அந்தப்பெண் வேகமாக வீட்டிற்கு வந்து தன் கணவனிடம் தான் கேள்விப்பட்டதை சொன்னாள்.

உடனடியாக அவன் தன்னை வேலைக்கு வைத்தவனிடம் இந்த விவரங்களை சொல்ல அடுத்த நொடியே அந்த தகவல் தமிழ்நாட்டைத் தாண்டி மும்பை சென்றடைந்தது.

மும்பை....

சார்.... நீங்க சொன்ன பொண்ணை புன்னக்காயல் பகுதியில் இருந்த ஒரு மீனவர் தான் கண்டுபிடிச்சு இருக்காரு. ஆனால் அதற்கப்புறம் அந்த பொண்ணை எங்க கூட்டிட்டு போனாரு. இப்போது எங்க இருக்காருன்னு எந்த ஒரு தகவலும் தெரியல... சார்

இந்த தகவலை சொன்னவர்கிட்ட கேட்க வேண்டியதுதானே..

அவ ரொம்ப வயசானவர். அவருக்கும் எதுவுமே சொல்ல தெரியல. அவர் பிரண்டு தான் அந்த பொண்ண கூட்டிட்டு போய் இருக்காரு. ஆனா இப்போ எங்கே இருக்கிறானு அவருக்கு தெரியல.

சரி... அந்த கிராமத்துல சுற்றுவட்டாரத்தில் விசாரிச்சு பாத்தியா..

பார்த்தேன் சார்.. ஆனால் யாருக்கும் தெரியவில்லை. நடுராத்திரில தான் படகிலிருந்து வந்திருக்கிறார்கள். ஊர்ல யாருக்குமே தெரியாம இந்த பொண்ண கூட்டிட்டு உடனே இங்கிருந்து போயிருக்கிறார். அதை பத்தி தெரிஞ்சதும் இந்த வயசான வரும் ஒரு ஆட்டோ டிரைவரும் தான். ஆட்டோ டிரைவர் அந்தப் பொண்ணை விட்டுட்டு வரும்போதே ஒரு ஆக்சிடெண்டில் இறந்து போயிட்டாராம்‌. மத்த யாருக்குமே அதை பத்தி எந்த ஒரு தகவலும் தெரியல.

அந்த வயசான ஆளோட ஃப்ரெண்ட் பெயர் என்னன்னு தெரியுமா..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.