(Reading time: 16 - 31 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

இல்ல நான் பார்த்ததில்லை என்று ராகவ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சற்று தொலைவில் தண்ணீர் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. குழலி ராகவ் இருவரும் அங்கு ஓடினார்கள்.

அந்த மனிதரை பாம்பு தீண்டி விட்டு செல்வதை இருவரும் புரிந்து கொண்டார்கள். அந்தப் பாம்பை அடிப்பதற்காக கட்டையை எடுக்க குழலி தடுத்துவிட்டாள். அவரை தூக்குவதற்கு உதவி செய்யுமாறு அவள் கேட்க அவனும் உதவி செய்தான். அருகிலிருந்த பெஞ்சில் அவரை படுக்க வைத்துவிட்டு தன்னிடமிருந்த சிறிய பிளேடை எடுத்து கடிவாயில் சிறிது வெட்டி விட்டு அந்த இடத்தில் இருந்த விஷத்தை தன் வாயால் உறிஞ்சி துப்பினாள் குழலி. அதற்குள் அந்த இடத்தில் கூட்டம் கூடி விட அந்த மனிதரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

குயிலி... உனக்கு என்ன பைத்தியமா.. ஒரு டிராப்ஸ் விஷம் உன் உடம்புக்குள்ள போனா நீயும் செத்து போயிடுவே... தெரியுமா?

சாதாரண மனுஷர்கள் பாம்பு விஷத்தால் செத்துப் போய் விடுவார்கள். ஆனால் என்னை ஒன்றும் செய்யாது..

ஏன் நீ என்ன வேற்று கிரகவாசியா..

அப்படி இல்ல ராகவ்.. சின்ன வயதிலிருந்தே தாத்தா கூட காட்டுக்கு போய் இருக்கேன். மூலிகை பறிப்பதற்காக ஒரு தடவை போயிருந்த போது என்னை பாம்பு தீண்டி விட்டது. தாத்தா கவனிப்பதற்குள் விஷம் என் உடலில் பரவி விட்டது. ஆனால் தாத்தா மாற்று மருந்து கொடுத்து என்னை குணப்படுத்தினார். அப்போது தான் அவர் சொன்னார் உடம்பிற்குள் பாம்பு விஷம் எப்பொழுதும் இருக்கும். அந்த விஷம் உன்னை ஒன்றும் செய்யாது என்று சொல்லி இருக்கிறார். அதனால் தான் தைரியமாக செயல்பட்டேன் என்று அவள் சொல்ல அவனுக்கு அது மூடத்தனமாக தெரிந்தது. ஆனால் இனி இவளிடம் எதையும் பேசி புரிய வைக்க முடியாது என்று நினைத்தவன் அவளிடம் இருந்து விடை பெற்றான்.

ஓகே குயிலி நாளைக்கு பார்ப்போம் என்று சொல்ல அவளும் சரி என்றாள்.

அதற்குப் பிறகு வந்த நாட்களில் இருவரும் நல்ல நண்பர்களாக மாறி இருந்தார்கள். வரும்பொழுது ஏனோதானோவென்று இருந்த குழலி இப்பொழுது பட்டணத்துப் பெண்ணாகவே மாறி இருந்தாள்.

அவளுடைய தைரியமும் துணிச்சலும் அவளை துடுக்கானவளாக எடுத்துக்காட்ட ஒரு வித்தியாசமான பெண்ணாகவே வலம் வந்தாள். அவளுக்கு என்று ஒரு நண்பர் கூட்டமே உருவாகியிருந்தது

புன்னக்காயல்....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.