அம்மா அம்மா பக்கத்து வீட்டு தாத்தா இருக்கிறாருல்ல... அவருக்கு உடம்புக்கு சரியில்லை. நீங்க கொஞ்சம் வந்து பாருங்க அம்மா..
சரி வா..
வயதான அந்த பெரியவருக்கு உணவு கொடுத்து மருந்து அளித்து உதவி செய்தாள் அந்த பெண்.
அம்மா... நீ நல்லா இருக்கனும்...
சரி பெரியவரே... இந்த வயதான காலத்தில் ஏன் தனியாக கிடந்து கஷ்டப்படுகிறீர்கள். உங்கள் பிள்ளைகள் யாரிடமாவது சென்று இருக்கலாம் தானே...
எனக்கு பிள்ளை குட்டி எல்லாம் யாரும் இல்ல.. நான் கல்யாணமே செஞ்சுக்கலை. எனக்கு ஆதரவா என் பிரண்டு ஒருத்தன் தான் இருந்தான். அவனும் இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னால என்ன விட்டுட்டு வெளி ஊருக்கு போய்ட்டான்.
அப்படியா அப்போ அவர் கூட நீங்களும் போய் இருக்கலாம் தானே.
இல்லம்மா... அவன் எங்க போனனே தெரியல. ஆனா இப்ப வர எனக்கு அவன் மாச மாசம் பணம் அனுப்பிக்கிட்டு இருக்கான். அதை வச்சு தான் நான் சமாளிச்சுக்கிட்டு இருக்கேன்.
மாதம் மாதம் பணம் அனுப்புகிறதா சொல்றீங்க. அப்புறம் ஏன் பார்க்க வரவில்லை.
அது ஒரு பெரிய கதை மா.. இதுவரை யாருக்கும் தெரியாது. நான் உன்கிட்ட சொல்றதை யார்கிட்டயும் சொல்லிடாத.
ஒருவேளை தான் எதிர்பார்த்த விஷயத்தைப் பத்தித்தான் சொல்லப் போகிறாரோ என்று நினைத்த பெண் கவனிக்கத் தொடங்கினாள்.
நானும் என் நண்பனும் சேர்ந்து எப்பவும் படகில் மீன்பிடிக்க போவோம். அப்படி ஒருநாள் வலையை போட்டுட்டு நாங்க வந்துட்டோம். திரும்ப எடுப்பதற்காக போகும்போது அந்த வகையில் ஒரு சின்ன பெண்ணும் இருந்தாள். அப்போ அவளை காப்பாத்தினா ஊருக்கு கூட்டிட்டு வந்தோம்.
அதற்கு அப்புறமா அந்த பெண்ணை தனக்கு தெரிஞ்ச சாமியார்கிட்ட கூட்டிட்டு போறதா சொன்னான். அதற்குப் பிறகு அவன் திரும்பி வரவே இல்ல. எங்க போனான் என்று ஒன்னும் தெரியல. ஆனால் பணம் மட்டும் வந்து கொண்டே இருக்கும்.
அப்போ அந்த பொண்ணு இப்ப எங்க இருக்கா...
அது எதுவும் தெரியலம்மா.
பெரிய பொண்ணா...
இல்லை.. ஒரு ஐந்தாறு வயது தான் இருக்கும்...