(Reading time: 16 - 31 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

ஏன் என்னாச்சு..

தெரியலையே...

அப்போ உன் கூட யார் இருக்கா.

நானும் தாத்தாவும் மட்டும் தான் இருந்தோம். இப்போது தாத்தாவும் இறந்து போயிட்டாங்க. அதனால தாத்தாவோட பிரண்டு என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க. பக்கத்துல இருக்குற தெரேசா அனாதை இல்லத்தில் தான் இருக்கேன்.

அப்போ உனக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்லையா.

அதெல்லாம் தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் என் தாத்தா மட்டும்தான்.

ஓ... உன்னோட பழைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் விட்டுட்டு வந்தது உனக்கு கஷ்டமா இல்லையா..

ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு யாரும் கிடையாது. எனக்கு எல்லாமே என் தாத்தா மட்டும்தான்.

ப்ரண்ட்ஸ் இல்லையா என்று ஆச்சரியமாக கேட்டவன் உனக்கு புட்பால் விளையாட தெரியுமா என்றான்.

அன்றைக்கு நீ விளையாடுனியே... அந்த விளையாட்டா

ஆமா...

அதுல தெரிஞ்சுகிறது என்ன இருக்கு. நீ அடிச்ச. அதை மாதிரி அடிச்சேன். அவ்ளோ தான்.

என்னா ஈஸியா சொல்லிட்ட போ... என்றவன் டிராயிங் எல்லாம் சூப்பரா வரைகிறாயே.. டிராயிங் கிளாஸ் போயிருக்கியா.

நீ வரைந்ததை நான் வெளியில நின்னு பார்த்தேன். அதை வச்சுதான் வரைந்தேன் என்று சொல்ல அவனுக்கோ அது எப்படி முடியும். இவள் பொய் சொல்கிறாளா என்று தோன்றியது. நீ இதுக்கு முன்னால் எந்த ஸ்கூல்ல படிச்ச என்றான்.

ஸ்கூலா... நான் எங்குமே போனதில்லை. இங்கு வந்த பிறகு தான் ஸ்கூலுக்கு போகனும் என்று இங்கே வந்து சேர்த்து விட்டாங்க.

அப்போ இதுக்கு முன்னால நீ படித்தது இல்லையா..

படிச்சிருக்கேன்... ஆனா ஸ்கூல்ல போய் இல்லை. என் தாத்தாவே எல்லாம் சொல்லி தந்திடுவார் என்று சொல்ல அவனுக்கு சற்று எரிச்சலாக வந்தது. ஆனால் அதை மறைத்து கொண்டு,

ஓ.... நீ வித்தியாசமான பொண்ணாக இருக்கிற. உன்னை பார்த்தா ரோபோட் மாதிரி நினைக்க தோணுது போ என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.