(Reading time: 21 - 41 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

தொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 05 - ராசு

ன்னடி நினைச்சுக்கிட்டிருக்கே உன் மனசில்?” மாதவனுடைய கடுமையான குரல் காதருகில் கேட்டதும் திடுக்கிட்டாள் மகாலட்சுமி.

எப்போது தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து தன் எதிரே வந்து நின்றான் என்று அவள் கவனிக்கவில்லை.

அதுவும் அவள் நாற்காலியை விட்டு எழுந்து சென்று விடாமல் அவளைத் தடுத்தவாறு நாற்காலியின் இருபக்கமும் கைகளை ஊன்றியவாறு அவளைக் குனிந்து பார்த்தவாறு கேட்டவனை மிரள மிரள விழித்துப் பார்த்தாள் அவள்.

எழுந்து ஓடிவிடலாம் என்றாலோ அவன் மறைத்த மாதிரி நிற்கிறான். அவனது வலுவான தேகம் கண்டு அவளுக்கு அவனை தள்ளிவிட்டு ஓடிவிடலாம் என்ற எண்ணத்தை அடியோடு நசுக்கியது.

அப்படியே ஓடி என்ன செய்யப் போகிறாள்? அவனுடன்தானே வாழ வேண்டும் என்று வீட்டில் முடிவெடுத்துவிட்டார்கள். அதை மாற்ற வேண்டும் என்று அவனைத் தேடி வந்தது தவறு என்று அவளுக்குத் தாமதமாகத்தான் புரிந்தது. அவனுக்கு என்றுமே அவள் மீது நல்லெண்ணம் கிடையாது.

அவன் அவள் சொல்வதைக் கேட்டு திருமணத்தை மறுப்பான் என்று எப்படி எண்ணினாள்?

அவள் கவனம் வேறு எங்கோ இருக்கிறது என்று அவன் உணர்ந்துகொண்டான்.

திடீரென தன் கன்னத்தை அவன் பற்றவும் திடுக்கிட்டாள்.

அவன் கை அவள் கன்னத்தை இறுக்கியது. அவளுக்கு வலித்தது.

“என்னடி நினைச்சுக்கிட்டிருக்கே உன் மனசில்? நான் உன்னைப் பெண் கேட்டு உன் வீட்டு வாசப்படி ஏறலை. உங்க வீட்டில்தான் வந்தாங்க. நான் ஒத்துக்கலை. உனக்கு எனக்கும் ஒத்து வராதுன்னு சொன்னேன். ஆனால் அவங்க அதை பொருட்படுத்தலை. என் மாமாக்கிட்ட சொல்லி என்னை சம்மதிக்க வச்சாங்க. என்னோட மாமா எனக்கு அப்பா மாதிரி. நான் அவர் பேச்சை மீற மாட்டேன்னு தெரிஞ்சு அவர்கிட்ட போயிட்டாங்க. நான் நினைச்ச மாதிரியேதான் நடக்குது. உன்னோட பணத்திமிரை என்னிடம் காட்டுவேன்னுதான் உன்கிட்டேயிருந்து ஒதுங்கியிருக்கனும்னு நினைச்சேன். இப்ப காட்டிட்டேயில்ல. என்னோட மாமா உன் வீட்டார் பேச்சைக் கேட்டுக்கிட்டு என்னோட உறவினர்கள்கிட்ட நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசிட்டாங்க. இப்ப எதையும் மாத்த முடியாது. என்னோட கௌரவம் எனக்கு முக்கியம். நீ ஏதாவது இடையில் நுழைந்து செய்யப் பார்த்தே தொலைச்சுடுவேன் தொலைச்சு. ஒழுங்கு மரியாதையா வீட்டுக்குப் போய் நல்ல பொண்ணா இரு. ஏதாவது தகிடுதத்தம் செய்ய நினைச்சே நீ எங்கே போனாலும் நான் விடமாட்டேன்.”

அவன் கண்கள் சிவந்திருந்தன. உடல் கோபத்தில் ஆடியது. அவன் கோபத்தில் பேசப் பேச அவள் கன்னத்தைப் பிடித்திருந்த பிடியின் இறுக்கம் அதிகமானது. அவளுக்கு வலித்தது. அவன் விட்டால் போதும் ஓடிவிடலாம் என்ற எண்ணத்தில் பரிதாபமாய் அவனையே பார்த்திருந்தாள். என்ன

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.