(Reading time: 12 - 23 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

பெயர் வர்ற மாதிரி நடந்துக்க மாட்டேம்மா.” என்று வாக்கு கொடுத்தாள்.

“போய். போய் தாத்தவைப் பாரு. அவர்தான் உன்னைப் பிரியனுமேன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு.”

“சரிம்மா.”

“டேய் கந்தசாமி.” என்றவாறே அறைக்குள் நுழைந்தவள் திகைத்துப்போனாள்.

அவளுக்கு முன்னரே அங்கே அமர்ந்திருந்தான் மாதவன். அதுவும் கந்தசாமியின் அருகாமையில் அமர்ந்து அவரை நலம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

இங்கேயும் என்னை நிம்மதியாக இருக்க விடாமல் வந்துவிட்டானா?

“லட்சுமிம்மா. வாடா வாடா. செல்லம்.”

கந்தசாமி கைகளை விரித்தார்.

அவள் கண்ணீருடன் தாத்தாவின் கைகளுக்குள் அடைக்கலமானாள்.

“என்னம்மா? இந்த கிழவனை விட்டுட்டு போறேமேன்னு அழறியா?”

“உனக்கு நான் வீட்டை விட்டுப் போறதில் வருத்தமே இல்லையா கந்தசாமி.”

“எப்படிம்மா இல்லாமல் இருக்கும்? ஆனாலும் நீ உன் புருசன் வீட்டுக்குல்லடா போறே. அதனால் சந்தோசம்தான்டா. சீக்கிரம் எங்களுக்கு கொள்ளுப் பேரனையோ பேத்தியையோ பெத்துக்கொடுத்துடு.” அவர் சொன்னதும் அவள் முகம் சிவந்தது. அவன் அவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

மதிய விருந்துக்கு முக்கிய உறவினர்கள் வந்திருந்தனர். ராஜசேகர் குடும்பமும் வந்தது. மகாலட்சுமிக்கு வந்த அனைவரையும் யார் என்று தெரிந்திருக்கவில்லை. பொதுவாக அனைவரையும் வரவேற்றாள்.

மாலை நேரம் கிளம்பும்போது மகாலட்சுமியின் நகைகளைக் கேட்டு வாங்கிய மாதவன் வளர்மதியிடம் கொடுத்தான்.

“அத்தை. நான் எல்லாத்தையும் திருப்பிக் கொடுக்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க. நான் இருக்கிற வீட்டில் அவ்வளவா பாதுகாப்பு இல்லை. எப்ப என்னால் இந்த நகைகளை பாதுகாக்க முடியும்னு நினைக்கிறேனோ அப்ப வாங்கிக்கிறேன்.”

அவன் சொன்னதை யாராலும் மறுக்க முடியவில்லை. அவன் மறுப்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

ஊரில் உள்ளவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களும் இருப்பார்கள். சில சம்பவங்கள் நடக்கும்போது அவற்றில் உள்ள நல்லவை மட்டும் சில பேருக்குத் தெரியும். சில பேர் அதில் என்ன குறையிருக்கிறது? என்றுதான் ஆராய்ச்சியில் இறங்குவர்.

இப்போதும் மாதவன் பணத்திற்காகத்தான் மகாலட்சுமியை மணந்து கொண்டான் என்ற பேச்சு ஊரார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.