(Reading time: 25 - 50 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

இவள்தான் அவன் மீது கோபப்படவேண்டும்.

“இனி நீ உன் இஷ்டத்துக்கு இருக்கலாம். ஹோட்டலுக்கு வேலைக்குப் போ. சும்மா இருந்தா மனம் சாத்தானாகிடும்.”

அதற்கு மேல் அவனிடம் எதையும் கேட்க அவள் விரும்பவில்லை. அவன் வேலைக்குப் போகலாம் என்று கூறிய உடனே அவளுக்கு சிறையில் இருந்து விடுதலை கிடைத்தாற்போலிருந்தது. என்னவோ நீண்ட நாட்களாய் சுவாசிக்க மறந்தவளை போன்று நிம்மதியாக மூச்சுவிட்டாள்.

குதூகலத்துடன் தங்கள் அறையை நோக்கி நடைபோட்டாள்.

அதே மலர்ச்சியுடன் கிளம்பினாள். சாப்பிடும்போது மலர்ச்சியுடன் இருந்தாள்.

“மதியத்துக்கும் சேர்த்து சமைச்சாச்சு. எனக்கு சாப்பாட்டை வீணாக்கிறது பிடிக்காது. அதனால் சாப்பாட்டை எடுத்துட்டுப்போயிடு. வேண்டாம்னு தோணுச்சுன்னா முன்னாடியே சொல்லிடு. நான் சேர்த்து வக்கல.”

அவன் பேசப்பேச முன்தினம் இரவு வந்து சென்ற அவன் மாமா மகள் நினைவில் வந்து எரிச்சலை மூட்டினாள். அவள் முகம் மாறியது.

“அப்புறம் நான் பேசுறதை அலட்சியப்படுத்தினாலும் எனக்குப் பிடிக்காது.” என்றான் கடுமையான குரலில்.

வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினர்.

அவன் வண்டி இருக்குமிடம் சென்றனர். இது நாள்வரை அவள் தன்னுடைய காரில்தான் சென்று வந்துகொண்டிருந்தாள். இப்போது அவளுடைய கார் அவளுடை பிறந்த வீட்டில் இருக்கிறது. அவன் வசதியில்தான் அவள் வாழ வேண்டும் என்பதற்கு அவள் வீட்டினர் சம்மதித்துவிட்டதால் அவளும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

அவள் இதுநாள்வரை இருசக்கர வாகனத்தில் சென்றதில்லை. வாசலை விட்டு இறங்கினால் தேர் போன்ற கார் அவளை ஏற்றிச் செல்ல காத்திருக்கும். இப்போதுதான் முதன் முறையாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யப்போகிறாள்.

அவன் வண்டியை ஸ்டார்ட் செய்ததும் அவள் ஏறி அமர்ந்தாள். பிடித்துக்கொள்ள பிடிமானம் எங்கிருக்கிறது என்று தெரியாமல் தடுமாறினாள்.

அவள் அமர்ந்ததும் வண்டி வேகமெடுத்தது. அவள் அமர்ந்திருந்த இருக்கை சரிவாக அமைக்கப்பட்டிருந்ததால் அவளால் நிலையாக அமர முடியவில்லை. அவன் மீது மோதினாள். வண்டியை நிறுத்தியவன் பின்பக்கம் அவளைப் பார்த்து,

“ஒழுங்கா உட்கார தெரியாதா உனக்கு?” எரிச்சலுடன் கத்தினான்.

“இல்ல. இப்பதான் முதல்ல வண்டியில் ஏறுறேன். எங்கே பிடிக்கிறதுன்னு தெரியலை.” என்றாள்.

“ஆமா பெரிய மகாராணி இல்லே. நீங்க வண்டியிலேயே ஏறியிருக்க மாட்டீங்கன்னு எனக்குத்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.