சென்றிருந்தார். அப்போது மேத்யூஸின் அறைக்கு வந்த மருத்துவர் வத்ஸலா அவரிடம் அந்த குண்டை தூக்கி போட்டார்.
"மேத்யூஸ் சார்… உங்க மருமகன் எங்கே… உண்மையில் அவரிடம்தான் கையெழுத்து வாங்க வேண்டும். அவசரத்தில் இருந்ததால் செய்யவில்லை… அவர் எப்போது வருவார்"
அதை கேட்டு அதிர்ந்தார்… 'மருமகனா…?' வாய்விட்டு சொல்லி விட்டார்போல…
"உங்க மகளுடைய கணவர் சார். அவர்தானே பொறுப்பு."
"அப்படினு யார் சொன்னது?"
"நீங்க சொல்ல மறந்துட்டீங்கபோல… ஆனால் . அவருடைய ரத்த பரிசோதனை சொல்கிறது. ப்ரோலாக்டின் இருக்கு. அவங்களிடம் போஸ்ட்போர்ட்டம் பாதிப்புகள் இருக்கு. நியூ மாம் என்பதால் சிகிச்சையில் இன்னும் கேர் எடுத்து செய்கிறோம்.சீக்கிரம் உங்கள் மருமகனை வர சொல்லுங்கள்" என்றார்.
அவர் சொன்னதை கேட்ட மேத்யூஸிற்கு விஷயம் புரிய ஆரம்பித்தது…. அப்படி எனில் அவர் காப்பாற்றியது மீராவையா? அவருடைய செல்லம் ரேச்சல் இறந்து விட்டாளா? ஐயோ…
அவருக்கு திடுமென மூச்சு திணற ஆரம்பித்தது. அவரை பார்த்து,
"சார் என்ன ஆச்சு…?. மருமகனுடன் ஏதாவது தகராறா… " என்று வத்ஸலா பதறினார். மேத்யூஸிற்கு தன்னுடைய நிலை புரிந்தது. மீராவை ரேச்சலாக மாற்றி இருக்கிறார். தப்பு நடந்து விட்டது.. ஆனால்… அது ஷீலாவிற்கு தெரியக் கூடாது.. அவசரமாக கணக்கிட்டார்...
" ஆமாம்… இதுபற்றி நீங்கள் யாரிடமும் கேட்காதீர்கள். என்னோட மனைவியிடமும்கூட… அவள் தாங்க மாட்டாள்…" திடுமென நெஞ்சில் வலி கிளம்ப மெல்ல பேச முயற்சித்தவர் அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி போனார்.
மேத்யூஸிற்கு மாஸிவ் ஹார்ட் அட்டாக்!.. அவரை எமர்ஜென்ஸி பிரிவில் சேர்த்து சிகிச்சை செய்தார்கள். ஒருநாள் முழுவதும் கழிந்தபின் அவர் தனியறைக்கு மாற்றப்பட்டார். ஷீலாவிற்கு அதற்குள் உடல்நலமில்லாமல் போக அவரும் ட்ரிப்ஸ் போடப்பட்டு வேறு அறையில் படுக்க வைக்கப்பட்டார்.
இரண்டாம் நாள் ஓரளவிற்கு உடல் நலம் தேறிய மேத்யூஸ் மருந்துகளின் உதவியினால் மனநிலை தெளிவாகினார். அவரை பாரக்க வந்த டாக்டர் வத்ஸலாவிடம்..
"டாக்டர்.. என்னுடைய மருமகன் கோபித்துக் கொண்டு வெளிநாட்டில் இருக்கிறார். விரைவில் அவரை சமாதானம் செய்ய முயற்சிக்கிறேன்" என்று.சமாளித்தார்.
தனிமையில் பல சிந்தனைகள் வந்தன. அவருடைய மகள் இறந்து விட்டாள். மீராவின் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது ரேச்சலுடைய உடல்தான். நினைக்கும்போதே அவருக்கு உடல் பதற ஆரம்பித்தது…