"ஐய்ய… எங்க வீட்டுல நகை கேட்டால் உடனே வாங்கி தந்திடுவாங்க. அது ஒருவகை இன்வெஸ்ட்மெண்ட்தானே. தேவையில்லாத செலவுதான் செய்ய மாட்டாங்க… ம்… சென்னையிலிருந்து விமானத்தில் போயிருக்கலாம். இந்நேரம் வீட்டுக்கு போயிருப்போம். அது தேவையில்லாத செலவுன்னு சொல்லிட்டாரு... பணத்துல அவ்வளவு கெட்டி"
"நல்லதுதானே… அதனாலதான நான் உங்களை பார்க்க முடிஞ்சது." மீரா சொல்லும்போது…
பலத்த சப்தம் கேட்டது. பஸ் எதன் மீதோ மோதி விட்டதோ…! அதீதமாக குலுங்கியது. மீராவும் ரேச்சலும் உருள… மேத்யூஸ் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தார்.
அப்போது மீராவின் கழுத்திலிருந்த தாலி சங்கிலி அங்கிருந்த கொக்கியில் மாட்டிக் கொள்ள அதை பிடித்துக் கொண்டு கத்தினாள்.
"என்னோட தாலி இதுல சிக்கிடுச்சு…"
"இரு… இரு நான் எடுத்து விடறேன்" என்று தடுமாறியபடி ரேச்சல் முயற்சிக்கும்போது, தடம் மாறிய பேருந்து தடதடவென ஓட ஆரம்பித்தது. சாலையோர மரங்களின் மீது உரசியபடி செல்ல...
பெரிய அதிர்வுகளினால் திடுக்கிட்ட மேத்யூஸ் , நடக்கவிருக்கும் பேராபத்தை உணர்ந்து பெண்கள் இருவர் கைகளையும் இறுக பற்றினார்… பஸ் கட்டுபாட்டை இழந்து விட்டது புரிந்தது. அது ஸ்லீப்பர் கோச் என்பதால் பயணிகளால் உடனடியாக வெளியேற முடியவில்லை… கேபினுக்குள்ளேயே உருண்டனர்.
அப்போது நெருப்பு சுவாலைகள் பஸ்ஸின் பின்பக்கத்திலிருந்து வர… அனைவரும் அலற ஆரம்பித்தனர். முழு கட்டுப்பாட்டை இழந்த பஸ் பேயாட்டம் ஆடியது… அதனுடைய அசூர குலுக்கலில் மேத்யூஸை பற்றியிருந்த மீரா ரேச்சலின் கைகள் தளர… பதறிய அவர் துடிக்கும் இதயத்தை இறுக்கமாக பிடித்தபடி பார்வையை மறைத்த புகைக்கிடையில் காற்றில் கைகளால் துழாவினார். அவருடைய கையை இறுக்கமாக ரேச்சல் பிடிப்பது தெரிந்தது… மீரா… மீரா என்று கத்தியபடி அவளையும் தேடினார்.
புகைக்கும்… நெருப்பு சுவாலைக்கும் இடையில் கலங்கிய காட்சிகள் தெரிய… அவரால் மீராவை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது பெட்ரோல் டாங்க் வெடிக்க… பஸ்ஸிலிருந்து தூக்கி எறியபட்டனர்….
சாலை ஓரத்தில் மகளுடன் மேத்யூஸ் உருள… ஓரத்தில் கொட்டி கிடந்த ஜல்லி கற்குவியலில் ரேச்சல் உருண்டாள். அவள் தாறுமாறாக தரையில் இழுக்கப்பட்டதை பார்த்தவர் குரலெடுத்து கதறினார். அவர் கண் எதிரேயே அவர்கள் பயணித்து வந்த பேருந்து வெடித்து சிதறியது. அவரால் மீராவை காப்பாற்ற முடியவில்லை. இயலாமையுடன் அந்த இடத்தை வெறித்து