இல்லை… வருத்தப்பட இப்போது நேரமில்லை… அவர் மாபெரும் தவறு செய்திருக்கிறார். அதை சரிசெய்ய வேண்டும். மீராவை ரேச்சலாக மாற்றி வைத்திருக்கிறார். ஓகே… ஓகே… அவர் தவறு எதுவும் செய்யவில்லை… உண்மையில் முகம் சிதைவுற்று மரணத்தின் பிடியில் இருந்த மீராவிற்கு ரேச்சலின் முகத்தை தந்து காப்பாற்றி இருக்கிறார். இதை அவளுடைய கணவனுக்கு புரிய வைத்து இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும். அத்துடன் மீராவிற்கு அவர் தந்த வாக்கையும் காப்பாற்றியாக வேண்டும்…
ஆனால் இப்போதைய உடல்நிலையில் அவரால் அதை செய்ய முடியாது. அவர் குணமானபின் செய்யலாம்…
ஒருவேளை… ஒருவேளை… குணமாகாமலே போனால்…?. மாற்று ஏற்பாடாக அவர் இந்த வேலையை யாரிடமாவது பொறுப்பாக ஒப்படைக்க வேண்டும். ஷீலாவால் இதை செய்ய முடியாது… அவளால் இப்போதே நடப்பவற்றை தாங்க முடியவில்லை… வேறு யார் இதை செய்ய முடியும்?
ஜெமி….!. கரெக்ட்… அவன் இதனை சரியாக செய்வான். அவரை நூறு சதவிகிதம் புரிந்து கொண்டவன் அவன்தான்… அவருக்கு இப்படி தோன்றவும் அனைத்தையும் அலைபேசியில் பதிவு செய்தார்… அதனை கூகுள் ட்ரைவில் ஸ்டோர் செய்தார். அப்படியே அவனுக்கு ஷேர் செய்தால் போதும்… மீண்டும் ஒருமுறை சரி பார்த்து விட்டு இன்னும் சில செய்திகளை சேர்த்து ஷேர் செய்யலாம். அவருடைய பங்கு பரிவர்த்தனை விற்பனை குறித்து அவனிடம் சொல்ல வேண்டும்.
அனைத்தையும் செய்துவிட்டு சற்று உறங்க ஆரம்பித்தவர்… மீண்டும் எழவே இல்லை!.
இந்த மொத்த கதையையும் ஜெமி அவருடைய ஆடியோ பதிவிலிருந்து தெரிந்து கொண்டான். இப்போது அவர்கள் வீட்டில் இருப்பது ரேச்சல் அல்ல மீராதான். அவளுடைய கணவனிடம் அவளை சேர்க்க வேண்டும். அவனுக்கு மலைப்பாக இருந்தது.
மீராவின் கணவன் யார் என்ன என்பது தெரியாது. மாமாவின் அலைபேசியில் பதிவாகி இருந்ததது தவறான எண்… அந்த மீரா அவசரத்திலும் பதட்டத்திலும் எண்ணை தவறாக அழுத்தி இருக்கலாம். அது அப்படியே பதிவாகி விட்டது… அதனால் அது இப்போது உபயோகப்படாது… அவனுடைய பெயர் மட்டும் தெரியும்… சத்யன்..!
அது வெறும் சத்யனா… சத்யபிரகாஷ்.. சத்யராஜ்… சத்யதேவ்… சத்யேந்திரன்.. சத்யகுமார்… என்று தொடர் சொல்லுடன் உள்ளதா என்றும் தெரியாது. ஆனால் அந்த சத்யன் என்ற பெயர் மட்டும் எங்கேயோ கேள்விபட்டதுபோல இருக்கிறது…
ஜெமியின் இந்த கவலையுடன் அவனுடைய இளவயது தோழியை இழந்த கவலையும் சேர்ந்து