(Reading time: 23 - 45 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

முன்பு போல சுயம் இழந்து மீரா மீரா என்று கலங்கி போக மாட்டேன். "

"எப்படி இப்படி ஒரு உறுதி வந்தது?"

"அன்பு நம்மை வாழ வைக்கும் தாத்தா. நான் மீராவின் மீது வைத்திருக்கும் அன்பை பலவீனமாக மற்றவங்களுக்கு காட்டக் கூடாது. அதை பலமாக காட்டினால்தான் என் மகள் எங்களை…  எங்கள் காதலைமதிப்பாள்."

"அடடாகேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. ஆமாம் அந்த உயரங்கள்னு சொன்னியே அது என்னப்பா… "

"மீரா சில கனவுகள் கொண்டிருந்தாள். பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கான இல்லம்…  ஆதரவற்ற முதியவர்களுக்கான ஓய்வு இல்லம்இலவச கல்விஇப்படி நிறைய கனவுகள். அந்த கனவுகளை நனவுகளாக நிறைவேற்றி இன்னும் பல உயரங்களை தொடுவேன்."

"நல்லதுஅப்போ நீ உங்க வீட்டுக்கு கிளம்பலாம்."

"நன்றி தாத்தா. நீங்களும் அங்கே வந்திடுங்க."

"எனக்கு இந்த ஊர் பிடிச்சு போச்சுப்பா.. இங்கேயே இருக்கேன்"

சத்யன் கிளம்பியதும் நந்தினியிடம் சென்றார்.

"என்ன நந்தும்மாஉன்னுடைய ப்ளாக் பஸ்டர் திட்டம் பஸ்ட் ஆயிடுச்சே"

"என்ன தாத்தா சொல்றீங்க?"

"நீ உன அண்ணனுக்காக போட்ட திட்டம் டமாலாயிடுச்சுனு சொல்றேன்."

"என்ன திட்டம்?" இவருக்கு என்ன தெரியும்

"ரேச்சலோட சத்யனை சேர்த்து வைக்கும் ப்ளான் போட்டியே..அதைதான் சொல்கிறேன். அவன் மீராவின் நினைவில் நிறைய சோஷியல் வொர்க் செய்து யோகியாக வாழப் போறானாம்.."

"அட போங்க தாத்தா.. ஏற்கனவே ரேச்சல் ஒரு அம்னீசியா நோயாளினு தெரியவுமே திட்டம் தோல்வி அடைஞ்சிட்டது."

"இப்ப என்ன செய்ய போற?"

"ம்ரேச்சலுக்கு அம்னீசியாவை குணப்படுத்த சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க போறாங்க. அதுக்கப்புறம்தான் ஏதாவது முடிவெடுக்கனும்"

"எப்படினாலும் உன்னோட சாய்ஸ் ரேச்சல்தானா.."

"என்னமோ அவளை பிடிச்சு போச்சு தாத்தா. அவளுக்கு மனுவையும் அண்ணனையும் ரொம்ப பிடிக்கும். மனுவை பிடிக்கும்னு வாய்விட்டு சொல்றதுபோல அண்ணனை பிடிக்குனு சொல்ல மாட்டேங்கறா"

"உண்மையான அன்பு எப்போதும் நிலைத்திருக்கும்அவளுக்கு குணமானாலும் கூட

4 comments

• Super ji
Adiii avasarkuduka porumaiyae kidaydu
Mannippu kakutaramla mkum
Moonjilaye muzhikamatalakum ha ha
Jemi ranjan meet konjam nerungiduchu
Then inda lr aduthu
Prata thala klinja jeen oodiya police station pova jemi😁😁😁
• viruviruppa poittu irundhadhu ipadi pause panitingala ms sagambari facepalm adutha kanavula uruttu kattai than pole irukku :grin: malai scene kanva irukkumnu guess panitalum filmy range la mandai la adipattu memories vandhudumo nu oru ethir parppu 😂😂😂😂 :P jemy ranjan information share panadha podhu varum andha crooked sirippu ungaludhu thane 😈 jemy yavdhu choose pana vitingala adhuvum illai, sathyan letter pidinga padika vittingal adhuvum illa what ji ninga 😱 sathyan nijamave avasara kudukan than..plan pannadhuu pole hospital la visaringa boss...I like the way you confuse his thoughts about Racheal vs Meera 👌👏👏 suspense Nala carry panuringa :hatsoff:
As always well justified madam ji :hatsoff:
Porumai sothikamal secret unfold panunga pa....me waiting😍😍
Thank you.
• இவனுக்கு வேற வேலை இல்லை. எப்ப பாரு சண்டை போட்டு மன்னிப்பு கேட்டு திரிய வேண்டியது

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.