சத்யனிடம் இருக்கும் அன்பே மாறாதுன்னு சொல்கிறாயா? இந்த சத்யன் மனசு மாறனுமே"
"ஆமாம். காலம் அனைத்தையும் கனிய வைக்கும். கசப்பை இனிப்பாக்கும்.கொஞ்சம் காத்திருக்கலாமே தாத்தா." என்று முற்றுபுள்ளி வைத்தாள்.
காலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பிவிட்ட ரேச்சல் அவளுடைய வழக்கமான மரத்தடியில் ரஞ்சனுக்காக காத்திருந்தாள். வழக்கமாக அலுவலகம் செல்ல இந்த வழியில்தான் காரில் வர வேண்டும்…
அவள் காத்திருப்பு வீணாகவில்லை… கார் அந்த வழியே வந்து கொண்டு இருந்தது. பரபரப்புடன் சென்று காரை கை நீட்டி தடுத்து நிறுத்தினாள். காரின் ஜன்னல் மூடி இருந்ததால் உள்ளே யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
கார் கதவை கதவை திறந்து சத்யன்தான் இறங்கினான். அவன் அப்படியே காரை நிறுத்தாமல் சென்றிருக்க வேண்டும்… ஆனால் இனி கனவிலும் அவள் அவனை நினைத்து பார்க்க கூடாது… அதற்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்து கோபமாக இறங்கினான்.
அவனை பார்க்கவும் கொஞ்சமும் களங்கமில்லாமல்… புன்சிரிப்புடன்..
"குட்மார்னிங் சத்யன் சார்" என்றாள்.
"என்ன குட்மார்னிங்… நீ வணக்கம் சொல்லலைனு உங்கிட்ட வந்து அழுதேனா.. காரை நிறுத்தி பல்லை காட்டி சொல்ற. " என்று ஆரம்பித்தான்.
அவள் திகைத்து நிற்கவும்…
"தனியாக பார்க்கும் போதெல்லாம் சத்யன் சார்னு சொல்றது… நாலு பேரு இருக்கும்போது சத்தீனு ஓடி வந்து கட்டிபிடிச்சுக்கறது. இது என்ன ட்ராமா…"
"சாரி… ஏன் இப்படி பேசறீங்க?"
"ஆகா… உன்னை கட்டிபிடிச்சதுக்கு எனக்கு பாராட்டு விழா நடத்தினாங்க. அதனால சந்தோஷமா பேசிட்டு இருக்கேன்.ஆமாம் என்ன ப்ளான் போட்டு வச்சிருக்க. முதல்ல மனுவை கைக்குள்ள போட்டுக்கிட்ட… இப்ப என்னை கவர் பண்ண ப்ளான் பண்ற… கனவுல உன் மூஞ்சியை காட்டினது பத்தாதுன்னு நேர்லயும் வந்து நிக்கற"
"ரொம்ப தப்பா பேசறீங்க"
"அப்படித்தான் பேசுவேன். எதுக்கு என்னையே சுத்தி சுத்தி வர்ற."
"நான் எதுக்கு வரணும்?"
"இப்ப காரை நிறுத்தி பேசுறதுக்கு என்ன காரணம்?. ரெண்டு நாளா பார்க்கலையே மறந்துட்டானோன்னு நினைச்சிருப்ப. ஆளு கொஞ்சம் நல்லா இருந்து காசு பணமும் வச்சிருந்து சிரிச்சு பேசிட்டால் போதுமே… கூச்சமே இல்லாம ஓடி வந்துடுவீங்க"