(Reading time: 23 - 45 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

ஷீலா சொன்னார்.

ஐயோ… ஆன்ட்டி தப்பாக நினைக்கறீங்கமீராவிற்கு கலம்காரி தெரியும்போல...என்று மனதிற்குள் நினைத்த ஜெமி,

"ரேச்சல் உனக்கு இதெல்லாம் நினைவுக்கு வருகிறதா...  ஹாஸ்பிட்டல்ல கண் முழிச்சப்போ நான் யார்னு கேட்டியாம்ஆன்ட்டியை தெரியலைனு சொல்லி இருக்கஎன்னைகூட மறந்துட்டஒவ்வொன்னா ஷீலா ஆன்ட்டி சொல்லவும் ஃபாலோ பண்ணிட்ட. ஆனால் இதெல்லாம் யாரும் சொல்லாமயே ஞாபகம் இருக்கே."

"அதுதான் எனக்கும் புரியலை. கிச்சன்குள்ள போனதும் சமைக்க தெரியுதுஇந்த பெயின்டிங் வேலை ப்ரஸை கையில் எடுக்கவும் மடமடனு வரைய வருதுஎனக்கு கார், ஸ்கூட்டி ஓட்ட தெரியுதுஇதெல்லாம் தானா வருது."

"ரேச்சல்உண்மையை சொல்லணும்னால் உனக்கு இதெல்லாமா தெரியாது. சைக்கிள் ஓட்டறப்பவே விழுந்து அடிபட்டுக்குவஉனக்கு காலில் எலும்பு முறிவு வந்ததுக்கு காரணமே சென்னைல ஸ்கூட்டி ஓட்ட கத்துகிட்டதுதான்."

"அம்னீசியா வந்தால் தெரியாத வேலையெல்லாம் செய்வாங்களாப்ச்எனக்கே ரேச்சல்னு சொல்றப்ப யாரையோ பத்தி பேசுற மாதிரிதான் இருக்குஆனால் ஷீலாம்மாவை ரொம்ப தெரிஞ்சதுபோல இருக்கேஇல்யூஷனாக இருக்குமோ?"

"ஜெமிஅவளை குழப்பாதேநேரத்துக்கு தூங்க போங்க. குட் நைட்" என்று சொல்லி விட்டு ஷீலா தன் அறைக்கு சென்று விட்டார்.

"இது மாதிரி வேற ஏதாவது இல்யூஷன்…  நினைவுக்கு வருதா?'

"அன்னைக்கு சிட்டிக்கு போனோமேஅது பழக்கமான இடமாக இருந்தது. ரெஸ்டாரென்ட்ஷாப்பிங் மால்எல்லாமே நானே போயிட்டேன்."

"…" ஜெமி யோசித்தான். மீராவின் வீடு சிட்டியில் இருக்குமோஅவளுக்கு மிகவும் பழக்கமான இடமாக இருக்குமோ?. அது சரிஷீலா ஆன்ட்டியை ரொம்ப தெரிஞ்சதுபோல இருக்குங்கறாளே

சில உறவுகளுக்காக நம் உள்மனம் ஏங்கிக் கொண்டிருக்கும்… அந்த உறவிற்கு மாய உருவம் தந்து நமக்கு பிடித்ததுபோல கற்பனையில் அதனுடன்  வாழ்ந்து பார்ப்போம். அப்படி  அன்னையின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த மீரா ஸ்கெட்ச் செய்திருந்த அம்மா கேரக்டருக்கு ஷீலா ஆன்ட்டி பொருந்தி இருக்கலாம்

அப்படித்தான் இருக்கும். அவனுடைய அலுவலக தோழி நஸீமாகூட 'எனக்கு ஒரு சகோதரன் இருந்தால் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேனோஅது போலவே இருக்கிறாய்' என்று சொல்லி  அவனை அண்ணா என்றுதான் அழைப்பாள்.

4 comments

• Super ji
Adiii avasarkuduka porumaiyae kidaydu
Mannippu kakutaramla mkum
Moonjilaye muzhikamatalakum ha ha
Jemi ranjan meet konjam nerungiduchu
Then inda lr aduthu
Prata thala klinja jeen oodiya police station pova jemi😁😁😁
• viruviruppa poittu irundhadhu ipadi pause panitingala ms sagambari facepalm adutha kanavula uruttu kattai than pole irukku :grin: malai scene kanva irukkumnu guess panitalum filmy range la mandai la adipattu memories vandhudumo nu oru ethir parppu 😂😂😂😂 :P jemy ranjan information share panadha podhu varum andha crooked sirippu ungaludhu thane 😈 jemy yavdhu choose pana vitingala adhuvum illai, sathyan letter pidinga padika vittingal adhuvum illa what ji ninga 😱 sathyan nijamave avasara kudukan than..plan pannadhuu pole hospital la visaringa boss...I like the way you confuse his thoughts about Racheal vs Meera 👌👏👏 suspense Nala carry panuringa :hatsoff:
As always well justified madam ji :hatsoff:
Porumai sothikamal secret unfold panunga pa....me waiting😍😍
Thank you.
• இவனுக்கு வேற வேலை இல்லை. எப்ப பாரு சண்டை போட்டு மன்னிப்பு கேட்டு திரிய வேண்டியது

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.