(Reading time: 13 - 25 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

பார்த்துக் கொண்டு நின்றார்கள்

ஜனனி வா போகலாம் என்றபடி சந்தியாவும் அவளது தோழிகளுயும் ஜனனியை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டு இழுத்து வந்தனர். ஜனனியும் கோபத்தில் சிவந்து போய் இன்னும் கூடுதல் அழகாக தெரிந்தாள்.

உன்னை என்ன செய்கிறேன் பார் என்றவாறு முத்து ஜனனியை நோக்கி வர முயற்சிக்க அவனது தோழர்களும் மாப்பிள இது சரியான நேரம் இல்லடா... இப்ப அமைதியா இரு என்றவாறு அவனை பிடித்து இழுத்து சென்றனர்.

வீட்டிற்கு வந்த பிறகும் ஜனனிக்கு மனதில் அமைதி ஏற்படவில்லை. கோபத்தில் திட்டிக்கொண்டே இருந்தாள். சந்தியா அவனை ஏதாவது செய்திருக்க வேண்டும்... அவனை விட்டுவிட்டு வந்தது தவறு என்று ஆக்ரோஷமாக கத்த போதும் ஜனனி அவன் அவன் செய்த தவறுக்கு அவன் அவனுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். இனி நீ வாழ வேண்டிய வாழ்க்கை மட்டும் பாரு என்றவாறு அவளை அமைதிப்படுத்த எண்ணி பதிலுக்கு ஜனனியிடம் கத்தினாள் சந்தியா.

சந்தியா எவ்வளவு சொல்லியும் ஜனனிக்கு மனதில் மட்டும் அமைதி ஏற்படவில்லை. அமைதி தொலைந்தால் தூக்கமும் தூரமாக ஜனனிக்கு சந்தியாவிடம் பேசலாம் என்று தோன்றியது. அவளை பார்க்க அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அதனால் அவளை தொந்தரவு செய்யாமல் நேராக மாடிக்கு சென்றாள். மாடியின் கைப்பிடிச் சுவரில் அமர்ந்து கொண்டு வானத்தை பார்த்தாள்.

 ஒற்றை நிலா அழகாய் சிரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் ஏனோ அதை ரசிக்க ஜனனிக்கு பிடிக்கவில்லை

அழகு என்பது பார்க்கும் பொருளில் இல்லை பார்ப்பவர் கண்களில் தான் இருக்கிறது என்பது எத்தனை உண்மை... ஒரு காலம் பௌர்ணமி எப்பொழுது வரும் என்று காத்திருந்து ரசித்த ஒற்றை நிலா இப்பொழுதெல்லாம் எதிர்பாராமல் கண்ணில் பட்டால் கூட ரசிக்க தோன்றாமல் வெறுப்பை ஊட்டுகிறதே.. ஏனோ அதை பார்க்கும் போதெல்லாம் வெறுமையும் வெறுப்புதான் வருகிறது. அதனால் பார்க்காமலே இருக்கலாம் என்று தோன்றியது.

ஒரு காலம் ரசிக்க தூண்டியது இன்னொரு காலம் வெறுக்க வைக்கிறது. இதுதான் காலத்தின் மாற்றமா.. இவ்வுலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பது உண்மைதான்... ரசனையும் விருப்பமும் கூட மாறி மாறி தான் அமைகிறது. ஆனால் சிலர் மீது வைத்த நேசம் மட்டும் எத்தனை காலம் கடந்தாலும் குறைந்தும் போகவுமில்லை மாறிப்போகவுமில்லை... இந்த வாழ்க்கையே ஒரு மர்மம்தான். விடை தெரியாத கேள்விகள் பல உள்ளன... அனைத்திற்கும் விடை அறிய முயற்சிப்போம் என்றால் அதைப் போல பெரிய முட்டாள்தனம் வாழ்க்கையில்

8 comments

  • Pulli vacha pothume kollam potu viduvingale.. super Jo... <br />Sweena bro yarunu januku theriyala analum ena panranganu parpom.. Thank you dear Adharv.. :thnkx:
  • I see...kadhai ippadi pogudha, janu oda karpanai nayagan than jana va 😍😍 so janu has some interest towards dhana ana avaru than Thanu oda appa nu theriyadho :Q: <br />Janu prison la irundhangala?? Waiting to know more about her fb.....win midnight la call seithu deal pesurangalakkum 😁😁😁 curious to see what happens next. Interesting ah pogudhu jeba ma'am 👏👏👏👏👏👏 janu, Muthu kk paadam edukama vidamatanga pole <br /><br />Thank you.
  • Interesting epi mam.Janani antha boys kita sanda podum pothu eallarum vedikai pathanganu solli irukinga athu ippa ealla eadathilayum nadanthutu than iruku eavlo problem irunthalam vedikai than pakuranga ,ivangala eallam thiruthave mudiyathu.waiting for your next epi mam
  • Good morning dear Jeba! கதை யதார்த்தமாக போகிறது, அதன் இடையிலே வாழ்க்கையைப் பற்றிய விளக்கத்தை இரு வரிகளிலே எழுதியிருக்கீங்களே, அது எளிமையாக தோன்றினாலும் ஆழமானது! எனக்கு தங்கள் படைப்புகளின் தரம் பிரமிக்க வைக்கிறது! Keep rocking!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.