(Reading time: 35 - 69 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

தன்  தங்கைகளை பார்த்தாள் அவர்கள் பார்த்தும் பார்க்காதது போல் தங்களுக்கு கணவராக வரபோகிறவரை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.   

"சரிங்க ஆண்ட்டி, தட்டு மாத்தலாம்!" என்று சந்தோஷமாக கூறினாள், நிக்கத்தோட கையை பிடித்துக் கொண்டாள்.

லட்சுமிக்கும், வேணுகோபாலுக்கும் சந்தோஷம், தன் பெரிய மகள் ரெண்டு பெண்களோட கல்யாணத்தை உடனடியாக பேசி முடித்தது, அவர்களை ஆனந்தப் படுத்தியது.

மூன்று பெரியவர்களும் தட்டை மாற்றிக் கொண்டனர், "ஆண்ட்டி இன்னிக்கு தட்டை மாத்திக்க சொல்வீங்கன்னு எதிர்பார்க்கல, அதனால உங்க மகன் குமரனுக்கும், செந்திலுக்கும் ஒன்னும் வாங்கல, நாளைக்கு நான் கடைக்கு போய் அவங்களுக்கு பாண்ட் ஷர்ட் வாங்கிட்டு வந்து கொடுக்கறேன்!" என்றாள் தனம்.

"அதெல்லாம் பரவாயில்ல தனம், ஏதோ புத்திகெட்டு ஏதேதோ கேட்டுட்டேன். எதையும் மனசுல வச்சுக்காத இனி நம்ம ரெண்டு குடும்பமும் சம்பந்த காரங்க ஆயிட்டோம் அதனால இந்த சம்ப்ரதாயம்லாம் ஒன்னும் வேண்டாம். கல்யாணத்துக்கு என்ன வாங்கணோம்னு தோணுதோ அதை செய்."

"அச்சோ ஆண்ட்டி அதெல்லாம் என் மனசுல ஒன்னும் இல்ல அதனால கவலப் படாதீங்க."

வாசலில் ஏதோ சத்தம் கேட்டு, வெளியே எட்டி பார்த்தாள், அதற்குள்  நிக்கத் " அட அஜய் வாப்பா உள்ள வா! " என்று கூப்பிடவும் தனத்திற்கு ஆச்சர்யம் வரமாட்டேன் என்றவன் வந்திருக்கிறானே என்று.

"வா அஜய்," என்று ஒரு கேள்வியோடு பார்த்தாள் .

"ஷாப்பிங் போயிருந்தேன், அப்படியே உங்கள...."என்று சுத்தி பார்த்தான் , எல்லோரும் போயிருப்பார்கள் அம்மா ரெடியா இருந்தா கூட்டிக் கொண்டு போகலாமென்று வந்தான், ஆனால் இவர்கள் இன்னும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

"பார்க்கலாம்னு வந்தேன் !"

அஜயை பார்த்த கண்ணம்மா குடும்பம் ஆச்சர்யம், இவ்வளவு அழகான இந்த ஆள் ஒரு ஆக்டரை போல் எத்தனை உயரம் அழகு என்று பிரமித்தபடி இருந்தனர். கண்ணம்மா தான் முதலில் "இது யார்?" என்று கேட்டார் .

நிக்கத்தும், தனமும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர்.

வள்ளி இந்த நாடகத்தை பார்த்து இதுதான் சாக்கு தனத்தை பழிவாங்க என்று நினைத்து " இதுதான், தனக்கா மகன் அஜய்! " என்றாள்.

தனம் அதிர்ச்சியோடு வள்ளியை பார்த்தாள், எல்லோருமே வள்ளியை எரிச்சலோடு பார்த்தனர்,

3 comments

  • Nice episode ma'am :hatsoff: . Nichayathaartham Nalla padiyaa mudinchu.marriage ku Idaiyila yaarum (mukiyama valli) problem pannama iruntha seri. Waiting for next episode ma'am :-) .
  • wow 21 pages :dance: :dance: :dance: heyyyyyyyy :-) nice epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.