(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

ஆயிட்டே, எதுக்கு இப்போ இத இழுத்து போட்டுக்கணும்னு தான் இந்த விஷயத்துலேர்ந்து ஒதுங்கினேன், ஆனா இப்ப அஜய்க்காக அவனோட மான அவமானத்துக்காக இப்ப இத சம்மதிக்கறேன், ஆனா இனி கல்யாணத்துக்கு அப்புறமும் நான் இங்கதான் அஜயோடத்தான் இருப்பேன் அதுக்கு சம்மதம்தானா?"

"ஹ்ம்ம் நானும் இங்கயே இருக்கலாம் தான, உனக்கு ப்ராப்லம் ஒண்ணுமில்லையே?"

"இருக்கு, எனக்கு ப்ராப்லம் இருக்கு ஆதூ, ரெண்டு காரணம்,  உங்க பேரன்ட்ஸ நீ விட்டுட்டு வரக்கூடாது, அப்புறம் உன் ரெண்டு குழந்தைங்க, அவங்கள தனியா விட்டுட்டு இங்க வரக் கூடாது."

" ஏன் நாம எல்லாம் ஒன்னாவே இருந்தா என்ன?"

"இல்ல ஆதூ ப்ளீஸ் அந்த பேச்செல்லாம் வேணாம், இப்ப கல்யாணமே அஜய் பிறப்புக்காகத்தான் ஆதூ, அதனால இன்னும் பிரச்சனையையை அதிகமாக்காத ஆதூ."

"சரி இப்போது நீ ஒத்துண்டதே பெரிய விஷயம் நல்லது நடக்கட்டும் காலப்போக்குல மத்ததெல்லாம் சரி பண்ணிக்கலாம்! "

"இப்பத்தான் சொன்னேன், இந்தமாதிரி எல்லாம் பேசக் கூடாதுன்னு, எனக்கு கல்யாணம் ஆனா பின்னால இந்த மாதிரி ஆர்குமெண்டெல்லாம் வேண்டாம்னு சொன்னேன், ப்ளீஸ் இத மாதிரி எல்லாம் பேசி பின் காலத்துல நம்ம கல்யாண பந்தத்தில ஒன்னும் விரிசல் வரக்கூடாது ஆதூ. "

"சரி சரி இனி இந்த மாதிரி பேச மட்டுமில்ல நினைக்க கூட மாட்டேன், ஓகேவா? சரி வா வெளியே போய் அவங்க கிட்ட சொல்லலாம். "

இரண்டு பேரும் வெளியே வந்தார்கள், அஜய் தன் அப்பாவை பார்த்து கை கட்டை விரலை உயர்த்தி காட்டி எல்லாம் சரியா? என்று கேட்டான்.

அப்துலும், தன் கை கட்டை விரலை உயர்த்தி எல்லாம் சரி என்று காண்பித்தான், இதை நிக்கத்தும் ஜாஃபரும் கூட பார்த்தார்கள், பெரு மூச்சு ஒன்றை வெளியிட்டார்கள். "வாம்மா தனம், என்ன முடிவு செய்தீங்க?"

"ஆண்ட்டி அது வந்து......"

"அம்மீ, வாப்பா நாங்க இன்னிக்கே அவங்க முறைப் படி நிக்கா செய்துடலாம், நாளைக்கே ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யலாம்னு முடிவு செய்திருக்கோம். தனம் இன்னும் கொஞ்ச நாள் வெயிட் செய்யலாம்னு சொன்னா, ஆனா நான் வெயிட் செய்ய தயாறா இல்ல நான் மட்டுமில்ல நம்ம அஜயும் இன்னிக்கே முடியணும்னு விருப்பப் படறான், அதான் முடிவு செய்ஞ்சுட்டேன், நீங்க என்ன சொல்றீங்க அம்மீ?"

"இது என்ன கேள்வி அபூ, அதான் நீ முடிவு செய்ஞ்சுட்டேன்னு சொன்ன பிறகு,  எங்களுக்கு

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.