(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

ஐடியா! " என்ன என்பது போல் அப்துல் தலை நிமிர்ந்து பார்த்தான்

"இன்னிக்கே நானும் நீங்களும் போய் கல்யாணத்துக்கு வேண்டிய தாலியை வாங்கி வந்துடலாம் நீங்க அம்மா வரப்போ என்னோட ரூம்ல இருங்க நான் அம்மாவிடம் பேசிட்டு உங்கள கூப்பிடறேன் , அப்புறம் நீங்க பேசி அம்மாவை கன்வின்ஸ் பண்ணுங்க. "

"ஆனா என் கார் வெளியே இருக்கே அஜய்!"

"பரவாயில்ல டாட் அத செல்வம் அண்ணா கிட்ட சொல்லி அதை பின்னாடி மூவ் பண்ணிடலாம்."

"சரி, வாட் நெக்ஸ்ட் ?" அப்துல், அஜயை பார்த்தான்

"நாம கொஞ்சம் வெளியே போலாம் வாரீங்களா?"

"நீயும் உன் அம்மாவும் கூட்டா எங்க வேண்ணா வருவேண்டா!"

அஜய் தன் அப்பாவை பார்த்து புன்னகைத்து விட்டு "சரி இப்ப வாங்க போலாம்!" போனை எடுத்து செல்வத்துக்கு கால் செய்து, "செல்வமண்ணா, வாசல்ல ஒரு கார் இருக்கு அதை பின்னாடி பார்க் பண்ணிடுங்க, நான் இல்லாத நேரத்துல அம்மா வந்தா இப்போதைக்கு அந்த காரை பத்தி ஒன்னும் சொல்லவேணாமண்ணா, அவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அவ்வளவுதான் சரியான்னா?"

"சரி தம்பி, நான் இதோ வரேன்" செல்வம் வந்து சாவியை வாங்கி கொண்டு, இத பார்க் பண்ணிட்டு வரேன், நாம போலாம் தம்பி! " என்றான் செல்வம்.

அப்துலை நிமிர்ந்து பார்த்தான், "இவர் வரணுமா நாம மட்டும் போலாமா?" என்று மெதுவாக கேட்டான்.

"அவரையும் கூட்டிட்டு போலாம் பார்க்கிங்க்லாம் ஈஸியா இருக்கும்."

"ஓகே டாட் , செல்வமண்ணா பார்க் பண்ணிட்டு வாங்க நாம வெளியே போகணும்."

"உங்கம்மா எங்கடா போயிருக்கா அவளையும் கூட்டிட்டு போலாமா? அவளை பார்க்கணும் போல இருக்கு அஜய் ?" ஏக்கத்துடன் கூறினான் அப்துல்

"டாட் ரொம்ப பீல் பண்ணாதீங்க டாட், சீக்கிரமே எல்லாம் நல்லதாவே நடக்கும் கவலப் படாதீங்க டாட்! "

'ஹ்ம்ம் என் நேரத்தை பார் மகன் கிட்டயே …

"

"இட்ஸ் ஓகே டாட், நான் வளர்ந்துட்டேன், உங்க பீலிங் எனக்கு புரியுது என்ன ஒரு பிரெண்டா நினச்சுகோங்க டாட், உங்களுக்காக நான் அம்மாகிட்ட பேசறேன், ட்ரஸ்ட் மீ!"

"நீ என் பிரெண்ட்தான் அஜய், என்னால இன்னும் நம்ப முடியல எனக்கு இவ்வளவு பெரிய மகன், ஹீரோ கணக்கா இருக்கடா நீ, யு லுக் ஹாண்ட்ஸம் மேன்!"  அவனை ரசித்துக்

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.