“சொல்லு அம்மு!”
“நீ ஒரு முடிவை எடுத்துட்ட, அதுல அப்படியே ஸ்டிக் செய்துக்கோ. எப்படி பார்த்தாலும் இந்த் டெசிஷன் சரி இல்லைன்னு ஒருத் தடவையாவது லைஃப்ல நீ வருத்தப் படுற மாதிரி சிச்சுவேஷன் வரத் தான் செய்யும்.”
“என்ன இப்படி சொல்ற?”
“சீரியஸா தான் சொல்றேன் மஞ்சு. இந்நேரம் நீ ரிசைன் செய்றது இல்லை, வேற எங்கேயாவது வேலை செய்றதுன்னு முடிவெடுத்திருந்தாலும் கூட அப்படி தான். நம்ம மனசு எப்போவும் செய்யாத ஒன்னை நினைச்சு குழம்ப தான் செய்யும்...”
“ஏன், நீ அப்படி யோசிச்சியா?”
“ஹ்ம்ம்... யோசிக்காம என்ன??? என் மதர் இன் லா கூடவே இருக்க வந்தப்புறம்ம் நான் அப்படி ஒருத் தடவை கூட யோசிச்சிருக்க மாட்டேன்னா நினைக்குற?”
“அவங்க அந்த மாதிரி... மனோஜ் அப்படி இல்லையே!”
“லூஸு மாதிரி பேசாதே. யாரும் 100% நல்லவங்களும் இல்லை, 100% கெட்டவங்களும் கிடையாது. மனோஜ் நல்லவர் தான், நான் இல்லைன்னு சொல்லலை, அதுக்காக அவர் செயின்ட் மாதிரி எப்போவும் இருப்பார்ன்னு நினைக்காதே, அது நம்மாலேயும் முடியாது, அவராலேயும் முடியாது. ஒரு சண்டை வந்தா, உங்களுக்காக வேலை விட்டு வந்தது தப்புன்னு நீயும் சொல்ல தான் போற, ஏதாவது ஒரு காரணத்துக்காக மனோஜும், நீ என்ன வேலைக்கா போறன்னு கேட்க தான் போறார்.”
“என்ன நீ இப்படி எல்லாம் சொல்லி பயமுறுத்துற?”
“நான் தான் சொன்னேனே உண்மையை சொல்லப் போறேன்னு! உன் மன அமைதிக்காக ஃபியூச்சர் வண்ணமயமா அழகா மட்டும் இருக்கும்னு சொல்ல எல்லாம் என்னால முடியாது!”