என்ன இல்லை, எல்லாமே இருக்கு...”
சின்ன தயக்கத்திற்குப் பின்,
“இல்லை அம்மு... மனோஜ் ஜாப் மாற ட்ரை செய்றார்... அவரோட விசா ரென்யூவல்க்கு இன்னும் ஒரு வருஷம் கூட இல்லை... அதனால சரியா எதுவும் செட் ஆகலை... சரா கம்பெனில ஏதாவது ஜாப் இருக்குமா???” என்று கேட்டு முடிக்கும் முன் மஞ்சுவிற்கு போதும் போதுமென்று ஆகி விட்டது...!!! அவளுக்கு இதுப் போல உதவிகள் கேட்டு பழக்கமே இல்லை!!!
ஆனால் அமுதா அதை வித்தியாசமாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.
“மனோஜ் வேற கம்பெனி மாறுறாரா?? நம்பவே முடியலை???” என்று ஆச்சர்யத்துடன் மட்டும் கேட்டாள்.
“அவர் ப்ராஜக்ட் டீம்ல ரீஸ்டரக்ச்சர் ஆச்சு. அங்கே நிறைய பாலிட்டிக்ஸ் இருக்கு...”
“ஹ்ம்ம்... மனோஜை இவ்வளவு இம்பாக்ட் செய்யனும்னா பெரிய பாலிடிக்ஸா தான் இருக்கனும். மனோஜ் மாதிரி ஒருத்தர் எங்களுக்கு கிடைச்சா சூப்பரா தான் இருக்கும்... அதும் இப்போ நாங்க எக்ஸ்டன்ட் செய்துட்டு இருக்கோம்... மனோஜோட எக்ஸ்பீரியன்ஸ் அண்ட் டேலன்ட்டோட ஒருத்தர் பக்கத்துல இருந்தா சரியா இருக்கும்.... நான் சரா கிட்ட பேசுறேன் மஞ்சு... 90% டன் ன்னு வச்சுக்கோ... இரண்டு நாள்ல கன்ஃபார்ம்டா சொல்றேன்...”
இன்று வெயில் அதிகம் என்று சொல்வதுப் போல ஈசியாக அமுதா சொல்லிவிடவும் மஞ்சுவிற்கு காதில் விழுந்ததை நம்பவே கடினமாக இருந்தது...!!!
“மஞ்சு??? டூ டேஸ் ஓகே தானே???”
“அது ஓகே அம்மு... தேங்க்ஸ்... உன் ஹெல்ப்க்கு ரொம்ப தேங்க்ஸ்... நார்மல் சிச்சுவேஷன்ல நான் இந்த மாதிரி கேட்டு இருக்க மாட்டேன்...”
“அடி!!! என் கிட்ட கேட்டா என்ன குறைஞ்சு போகுது? நீ என் கிட்ட எப்போ வேணா என்ன