“அதை எல்லாம் இப்படி முடிவு எடுக்க முடியாது டா... ஆல்ரெடி அதுக்காக நிறைய பேரை இண்டர்வியூ செய்திருக்காங்க. ஒருத்தரை ஷார்ட்லிஸ்ட்டும் செய்து வச்சிருக்காங்க. நான் தான இன்னும் பார்த்து அப்ரூவ் செய்யலை...”
“நல்லதா போச்சு... அதை பார்க்கவே பார்க்காதீங்க... நான் சொல்றவருக்கு பொசிஷனை கொடுத்திருங்க...”
“அமுதா! இது விளையாட்டு விஷயம் கிடையாது. இந்த பொசிஷன் பெருசு, ரொம்ப பொறுப்பான பதவியும் கூட.”
“எனக்கு அது தெரியும் சரா. மனோஜை எனக்கு முன்னாடியே தெரியும். அவர் ரொம்ப திறமையானவர். நீங்க அவர் கிட்ட பேசினா நீங்களும் இதையே தான் சொல்வீங்க...’
“அமுதா... அப்படி...”
“சரா, மஞ்சு என் கிட்ட ஹெல்ப்ன்னு கேட்டதுக்காகவே நான் மனோஜை நம்ம கம்பெனில சேர்த்துப்பேன். ஆனால் மனோஜ் திறமையானவரும் கூட... அதுல சந்தேகமே இல்லை...”
“ஆல்ரெடி நம்ம ரெக்ரூட்மென்ட் டீம் ஒருத்தரை செலக்ட் செய்துட்டாங்க டா...”
“ஐ டோன்ட் கேர்...” என்றாள் அமுதா பிடிவாதத்துடன்!
“அமுதா, மஞ்சு உன் ஃபிரென்ட் எனக்கு தெரியும். நீ சொல்ற அவளோட ஹஸ்பன்ட் திறமையானவரா கூட இருக்கலாம். ஆனால், நாம் ப்ராசஸ் படி போறது தான் நல்லது. இது பிஸ்னஸ் டா... சும்மா கன்னா பின்னான்னு முடிவை எடுக்க கூடாது...”
“சரா! நான் உங்களுக்காக எவ்வளவோ அட்ஜஸ்ட் செய்திருக்கேன், விட்டுக் கொடுத்திருக்கேன்... என் கிட்ட சொல்லாம நீங்க உங்க அம்மாவை இங்கே அழைச்சுட்டு வந்தப்போ கூட நான் ஒரு வார்த்தை கேட்கலை... முதல் தடவையா ஒன்னு கேட்குறேன்...”