ஹெல்ப் வேணா கேட்கலாம்... எதுக்கும் மனோஜோட ரெஸ்யூம் & டீடெயில்ஸ் ரெடியா வச்சுக்கோ... எனக்கு இரண்டு நாள் கழிச்சு தேவைப்படும்...”
“தேங்க்ஸ் அம்மு...”
தொடர்ந்து மேலும் சில நிமிடங்கள் அமுதாவிடம் மற்ற விஷயங்களை பேசி விட்டு அழைப்பை துண்டித்தாள் மஞ்சு.
அமுதாவிடம் பேசியது அவளுக்கு புது தெம்பை கொடுத்திருந்தது... மனோஜிடம் இப்போது எதுவும் சொல்ல வேண்டாம், இரண்டு நாட்களில் அமுதா முடிவை சொன்னதும் சொல்லலாம் என்று முடிவு செய்துக் கொண்டாள்.
அமுதா மகிழ்ச்சியான் மனநிலையில் இருந்தாள். அவளுக்கு மனோஜை மேனேஜராகவும் தெரியும், தோழியின் கணவனாகவும் தெரியும். அவனை போன்ற திறமையான ஒருவன் தங்களுடைய நிறுவனத்தில் இருந்தால் அதற்கு தனி சிறப்பு உண்டு என்பதை அவளால் உணர முடிந்தது.
எனவே மஞ்சுவிடம் பேசி முடித்த அடுத்த வினாடியே கணவனை தேடி சென்றாள்.
சரவணனின் அறைக்குள் அவள் சென்ற போது சரவணன் மும்முரமாக டைப் அடித்துக் கொண்டிருந்தான். அரவம் உணர்ந்து நிமிர்ந்தவன் மனைவியை கண்டு புன்னகை புரிந்தான்.
“சரா, நாம தேடிட்டு இருந்த புது ஹெட் ஆஃப் ஆபரேஷன்ஸ் கிடைச்சாச்சு. நான் சொல்லி இருக்கேன் தெரியுமா மனோஜ், மஞ்சுவோட ஹஸ்பன்ட் அவருக்கு அந்த போஸ்ட் கொடுக்கலாம்...” என்றாள் அமுதா.
சரவணன் யோசனையுடன் மனைவியை பார்த்தான்.
“அமுதா, ரிலாக்ஸ். முதல்ல இப்படி படபடன்னு பேசுறதை நிறுத்து...”
“அது இப்போ முக்கியம் கிடையாது... நான் சொன்ன விஷயம் தான் இம்பார்டன்ட்...”