“பர்சனல் லைஃப்பையும், பிஸ்னஸ் லைஃப்பையும் ஒன்னா சேர்த்து குழப்பக் கூடாது...”
“இந்த கதை எல்லாம் என் கிட்ட நடக்காது, சரா... நானும் இதே மாதிரி ப்ராசஸ், சரி, தப்புன்னு எல்லாம் பேச ஆரம்பிச்சேன்னு வைங்க... அப்புறம் உங்களுக்கு தான் கஷ்டம்...”
“ப்ச்...”
“மனோஜை ரெக்ரூட் செய்ங்க, சரா... எனக்காக அவரை எடுத்துக்கோங்க... அவர் உங்க எக்ஸ்பெக்டேஷன் தாண்டி பெர்பார்ம் செய்வார் எனக்கு நம்பிக்கை இருக்கு... ஒருவேளை அவரோட லேர்னிங் கர்வ் டைம் எடுத்தாலும் அவருக்கு துணைக்கு ஒருத்தரை போட்டுக்கோங்க... மே பீ நீங்க சொல்ற ஷார்ட் லிஸ்டட் பெர்சனை போட்டுக்கோங்க... எவரிதிங் வில் பி ஆல் ரைட். நீங்களும் ஹாப்பியா இருக்கலாம், நானும் ஹாப்பியா இருக்கலாம்..”
எப்படி இவளுக்கு புரிய வைப்பது என்று யோசித்த சரவணன், இறுதியில் அமுதாவின் பிடிவாதத்திற்கு விட்டுக் கொடுப்பது என்ற முடிவிற்கு வந்தான்!
“ஓகே, நீ சொல்றவரையே எடுக்கலாம். நான் ரெக்ரூட்மென்ட் டீமை அப்டேட் செய்றேன்...”
“தேங்க்ஸ் சரா... யூ ஆர் தே பெஸ்ட்...” என்று குதூகலத்துடன் சொல்லி, அப்படியே அவனை அணைத்து அவசர முத்தம் ஒன்றை அவனின் இதழில் பதித்தாள் அமுதா.
மனைவியின் எதிர்பாராத அணைப்பு + முத்தத்தில் சரவணனின் முகத்திலும் புன்னகை தோன்றியது... அவளுக்காக இதை செய்யலாம், தவறில்லை என்று தன்னை அமைதிப் படுத்திக் கொண்டான்...
அமுதாவும் உற்சாகத்துடன் மனோஜிற்காக அவள் தேர்வு செய்திருந்த வேலை பற்றிய விபரத்தை தன் கம்ப்யூட்டரில் இருந்து எடுக்கத் தொடங்கினாள்...