(Reading time: 14 - 27 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"ஆமாம் அண்ணி... மேடம் என்னை பாராட்டினாங்க... அடுத்து 100 வாங்கனும்ன்னு சொன்னாங்க... நெக்ஸ்ட் டைம் எப்படியும் 100% வாங்கியே தீருவேன்...."

  

சந்தோஷமாக பேசியவளை பார்த்த படி இருந்தாள் உமா. இரண்டு வருடத்திற்கு முன் அவள் திருமணமாகி இங்கே வந்த போது, கணவன் நிரஞ்சன் சொன்னது மனதில் ஓடியது..

  

"உண்மையா சொல்லனும்னா உமா, எனக்கு கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு எல்லாம் மனசில எண்ணமே இல்லை... உன்னைப் பார்த்த பிறகு என் மனசே மாறிப் போச்சு... ஆனால் இந்த கல்யாணம் முக்கியமா என் தங்கை மதுவுக்காக தான்... அவளுக்கு நீ ஒரு நல்ல கைடா இருந்து ஹெல்ப் செய்யனும்...."

  

"என்ன அண்ணி? தூங்குறீங்களா என்ன?"

  

மதுமதியின் கேலிக் குரலில் சிந்தனையில் இருந்து விடு பட்ட உமா,

  

"அதெல்லாம் இல்லை மது..." என்றாள்.

  

"சாரி அண்ணி... நித்யாவை கவனிச்சு நீங்களே டையர்டா இருப்பீங்க..."

  

"அடடா... அப்படி எல்லாம் எதுவும் இல்லை மது... சரி, அது என்ன ஒரு சப்ஜெக்ட்ல மட்டும் 95 மத்த எல்லாத்துலேயும் 60ஸ் 70ஸ்ல வாங்கி இருக்க?"

  

"என்ன செய்ய அண்ணி... பாரதி மேடம் ஒரு சப்ஜெக்ட் தானே எடுக்குறாங்க? ஆனாலும் பாருங்க circuitsல கூட 83 வாங்கி இருக்கேன்... ஏன் தெரியுமா? அது பாரதி மேடம் ஃபிரெண்ட் பவித்ரா மேடம் சப்ஜெக்ட்..."

  

"நீ சொல்றதைப் பார்த்தால், ஒன்னு உங்க பாரதி மேடமே எல்லா சப்ஜெக்டையும் எடுக்கனும் இல்லை அவங்க ஃபிரெண்ட்ஸ் தான் எடுக்கனும் போல இருக்கே...."

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.