(Reading time: 7 - 13 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

அவர்கள் இருவரும் முன்பு செய்ததையே தான் இப்போதும் செய்துக் கொண்டிருந்தார்கள்...

  

மனோஜ் பேசி பேசி சரவணனை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான்! சரவணன் தப்பிக்க வழியில்லாது மாட்டிக் கொண்டு விழித்துக் கொண்டிருந்தான்!

  

"ஹ்ம்ம்... குழந்தைப் பிறந்தாச்சு... அப்போ உன்னோட என்ஜாய்மென்ட் பீரியட் முடிவுக்கு வந்திருச்சு போல இருக்கு மஞ்சு..."

  

"ஹுஹும்... எப்போவுமே அப்படி தான்..."

  

மஞ்சு சொன்ன நேரத்தில் பெரிய ட்ராலியுடன் மருத்துவமனை ஃபுட்கோர்ட் சிப்பந்தி அங்கே அறைக்குள் வந்தார்.

  

அவர் கொடுத்த உணவுகளை சரிப் பார்த்து வாங்கி வைத்த மனோஜ்,

  

"லஞ்ச் வந்தாச்சு... சரா, அமுதா, நீங்க இரண்டுப் பேரும் இப்படி உட்கார்ந்து சாப்பிடுங்க..." என்று சொன்னதுடன் அவர்களுக்காக பேப்பர் ப்ளேட்களை வசதியாக மேஜை மீது எடுத்தும் வைத்தான். பக்கத்திலேயே அவர்களுக்காக ஆர்டர் செய்திருந்த உணவுகளை வைத்தான்.

  

குழந்தை பிறந்து அனைத்தும் நலம் என்று பரிசோதனைகளில் தெரிந்ததுமே மஞ்சுவையும் குழந்தையையும் வேறு தனி அறைக்கு மாற்றி விட்டார்கள்! பெரிய ஹோட்டல் அறைப் போல இருந்த அந்த மருத்துவமனை அறை மிகவும் வசதியாக இருந்தது. டிவி, மேஜை - நாற்காலி, இன்டர்காம் என அனைத்து விதமான வசதிகளும் அங்கே இருந்தது.

  

இதற்கெல்லாம் இன்சுரன்ஸ் வழியாக பணம் எடுப்பார்கள்... ஆனாலும் குழந்தைப் பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடவும், குழந்தையுடன் நேரம் செலவிடவும், கடந்த சில மாதங்களாக இருந்த அயர்ச்சியில் இருந்து வெளிவரவும், இந்த வசதிகள் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை...

  

மஞ்சுவிற்கு டாகடர் பரிந்துரைத்திருந்த உணவு ஃபுட்கோர்ட்டில் இருந்து அறைக்கு வந்து

2 comments

  • Wow lovely update Bindu ma'am 😍😍👏👏👏👏👏 Kutti M vandhuchi :dance: 🎊🎊 <br />Manoj chance-a illa :D semma caring :hatsoff: look forward to see what happens next.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.