விடும்! அதை தவிர மற்றவர்களுக்கு தேவையான உணவை இன்டர்காம் வழியாக ஆர்டர் செய்துக் கொள்ளலாம்.
அமுதா – சரவணன் மருத்துவமனைக்கு வந்ததுமே மனோஜ் அவர்களுக்கும் சேர்த்து உணவு ஆர்டர் செய்திருந்தான்...
அதை தான் இப்போது அவர்களுக்கு எடுத்துக் கொடுத்தான்... முதலில் இனிப்பான உணவை அவர்களுடன் பகிர பிரவுனியை ப்ளேட்டில் எடுத்து வைத்தான்...
"நீங்களும் மஞ்சுவும் மனோஜ்?" என்று அமுதா கேட்க,
"நான் மஞ்சுக்கு எல்லாம் எடுத்துக் கொடுத்துட்டு வரேன்..." என்றான் மனோஜ்!
அதற்கு மேல் அவனிடம் எதுவும் சொல்லாது தோழியைப் பார்த்தாள் அமுதா!
மஞ்சுவின் முகம் எந்த அயர்வும் இல்லாது மலர்ந்து பிரகாசித்துக் கொண்டிருந்தது!!! சில மணி நேரங்களுக்கு முன் தான் அவளுக்கு குழந்தைப் பிறந்தது என்று சொன்னால் நம்புவதே கடினம்!
"என்ன அப்படி பார்க்குற?" மஞ்சு அமுதாவிடம் கேட்டாள்!
"என்னோட நெக்ஸ்ட் டெலிவரி கட்டாயம் இங்கேயே தான்... என்ன ஆனாலும் சரி நான் சரா'வை விட்டுட்டுப் போறதா இல்லை..."
"ஓ... அதுக்குள்ளே அடுத்தக் குழந்தைக்கு பிளானா!!!! இதை தான் M&M எஃபக்ட்ன்னு சொல்வாங்க..."
"ஆமாமா... ரொம்ப பெரிய எஃபக்ட்! அடுத்த நோபல் ப்ரைஸ் உங்க இரண்டுப் பேருக்கும் தான்!!!!"
மஞ்சு சிரிக்க, அமுதா எழுந்து சென்று லயாவை சரவணனிடம் கொடுத்தாள்... பிறகு