(Reading time: 7 - 13 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

மனோஜின் கையில் இப்போதும் இருந்த குழந்தையை வற்புறுத்தி கையில் வாங்கிக் கொண்டாள்!

  

"உங்களுக்கு தான் பெஸ்ட் ஹஸ்பன்ட் ஆஃப் தி இயர் அவார்ட் மனோஜ்...! குழந்தை நல்ல படியா பிறந்தாச்சு... இனிமேலாவது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க... நீங்க சாப்பிடுங்க... நான் குழந்தையையும், மஞ்சுவையும் பார்த்துக்குறேன்..."

  

கொஞ்சமாக அசடு வழிந்தாலும், மனைவியைப் பார்த்தான் மனோஜ்...

  

மஞ்சுவும் தோழி சொன்னதை ஏற்றுக் கொள்வதுப் போல புன்னகைக்கவும் மனோஜ் சரவணனின் பக்கம் சென்று அமர்ந்தான்!

  

மஞ்சு இப்போதும் இமைக்காமல் கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்!

  

சில வருடங்களுக்கு முன் வரை இவனை யார் என்றே அவளுக்குத் தெரியாது... ஆனால் இன்று... பெற்றவர்கள், கூட வளர்ந்த தங்கை அனைவரையும் விட அவன் தான் முக்கியமானவனாக தோன்றினான்.. மனோஜ் அவள் மீது வைத்திருக்கும் அன்பு... அதை அவன் வெளிப்படுத்திய விதம்...

  

மனதுள் மந்தகாசம் பொங்க, மஞ்சு பார்வையை திருப்பி தோழியின் கையில் இருந்த மகனைப் பார்த்தாள்...

  

அவள் கண்ணிற்கு மனோஜிற்கும் அந்தக் பச்சிளம் குழந்தைக்கும் நடுவே பெரிய வேறுப்பாடு தெரியவில்லை!!! இருவருமே குழந்தைகளாகவே தான் தெரிந்தார்கள்...

  

மீண்டும் கணவனைப் பார்த்தாள் மஞ்சு...

  

சரவணனுக்கு தேவையான உணவுகளை எடுத்துக் கொடுத்து விட்டு மனோஜ் தனக்கு உணவு எடுக்கும் முன் நிமிர்ந்து மனைவியைப் பார்த்தான்...

  

அவளின் பார்வை தன் பக்கம் இருப்பதைக் கண்டான்...

2 comments

  • Wow lovely update Bindu ma'am 😍😍👏👏👏👏👏 Kutti M vandhuchi :dance: 🎊🎊 <br />Manoj chance-a illa :D semma caring :hatsoff: look forward to see what happens next.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.