(Reading time: 14 - 27 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

05. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

ழக்கம் போல் இந்து அன்றும் காலையிலே எழுந்து வழக்கமான யோகாவும் நடை பயிற்சியும் முடித்து விட்டு, வீட்டில் சமையல் செய்யும் கனகா கொடுத்த பாலை வாங்கி கொண்டு பால்கனியில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள். அங்கிருந்து பார்த்தால் அவர்களின் அழகிய தோட்டம் தெரியும். காலை வேளை என்பதால் சூரிய உதயத்தில் நிறம் மாறும் வானத்தையும் காண முடியும். இந்துவிற்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் இந்த நாற்காலியில் அமர்ந்து தோட்டத்தையும் மேகங்களின் எழிலையும் ரசிப்பது. அவள் இப்போது தங்களின் நிறுவனத்தை நிர்வகிப்பதால் முன்பு போல் ரசனைக்கு தனியாக நேரம் செலவிட முடிவதில்லை. அனால் காலையில் ஒரு அரை மணி நேரமாவது, இந்த இடத்தில செலவு செய்யாமல் அவள் இருந்ததில்லை. காலையில் விழிப்பது என்பது அவள் பெற்றோர் அவளுக்கு சிறு வயது முதலே பழக்கமாக்கி இருந்த ஒரு விஷயம். அதனால், காலையில் அரை மணி நேரம் அமைதியாக அமர்ந்திருக்க செலவிடுவது என்பது அவளுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. சில சமயம் அவள் அம்மா அர்ச்சனாவும் அவளுடன் இணைந்துக் கொள்வது உண்டு. இன்று அம்மா இன்னும் விழிக்கவில்லை என்பது அவள் பால்கனி வரும் போது மூடி இருந்த அம்மாயின் அறையின் மூலம் புரிந்தது. முன்பு அவள் தந்தை சரவணன் இருந்த போது இருந்த கலகலப்பு அம்மாயின் முகத்தில் தற்போது இல்லை என்பது அவளுக்கு தெரியும். தந்தையின் நினைவு வந்த உடன் அவள் மனம் கலங்கியது.

  

இந்துவின் அம்மா, அர்ச்சனாவின் குடும்பத்தினர், பலவிதமான வியாபாரங்களில் ஈடுப் பட்டிருந்தனர். ஆனால் அவளின் தந்தை சரவணின் குடும்பம் மத்திய தர வகுப்பை சார்ந்தது. பொதுவாக, ஆஃபிஸ் உத்தியோகம் பார்ப்பதையே அவரின் குடும்பத்தினர் விரும்பினர். ஆனால் சரவணன் மட்டும் அவர்களில் இருந்து வேறுப்பட்டு தானாக தொழில் தொடங்க விரும்பினார். திருமணமாகிய பின் அவர் தொடங்கிய நிறுவனம் தான் 'எஸ் எ கம்பெனீஸ்'.  'எஸ் எ கம்பெனீஸ்' சில்லறை வர்த்தகத்தில் (retail) புகழ் பெற்று விளங்கியது.

  

எதிர்பாராத விதமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் சரவணன் ஒரு சாலை விபத்தில் இறந்த பின் இந்து எஸ் எ கம்பெனிஸ்-ன் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். குடும்ப வர்த்தகமான அந்த நிறுவனத்தின் பங்குகள் நான்காக பிரிக்க பட்டு இருந்தன. சரவணன், அர்ச்சனா, இந்து மற்றும் இந்துவின் அத்தை சரவணனின் அக்க கல்பனா அனைவரும் தலா 25% பங்குகள் வைத்திருந்தனர். சரவணனின் மறைவுக்கு பின், அவரின் பங்குகள், அர்ச்சனாவிற்கு சென்றன. எனவே இந்து அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்று

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.