(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

பார்த்தார் சண்முகம் உறங்கிக் கொண்டிருக்க காவேரியோ குழப்பத்துடன் இருந்தாள். டிரைவர் கார் நிப்பாட்டியது கூட அவள் கவனிக்கவில்லை. டிரைவரோ

  

”அம்மா காவேரி” என அழைக்க அவள் என்னவென்று கூட பார்க்கவில்லை

  

”காவேரியம்மா” என மீண்டும் அழைக்க அப்போதும் அவளிடம் அசைவில்லை டிரைவர் குழம்பி பின்

  

”காவேரியம்மா” என சத்தமாக அழைக்க அதில் அவளின் கவனம் கலைந்தது உறங்கிக் கொண்டிருந்த சண்முகத்திற்கும் விழிப்பு வந்தது.

  

”என்ன அண்ணா ஏன் இப்படி கத்தறீங்க”

  

”ஊர் வந்தாச்சிம்மா”

  

”அப்படியா அதுக்குள்ள ஊர் வந்துடுச்சா”

  

”எங்க போய் வண்டியை நிப்பாட்டறது”

  

”இது என்ன கேள்வி”

  

”நம்ம வீட்டுக்கு விடட்டுமா இல்லை கொம்பன் இருக்கற இடத்தில வண்டியை விடவா” என கேட்க அவளோ வியந்தாள். சண்முகத்திற்கு தெளிவு வந்தது அவர் உடனே

  

“வண்டியை கொம்பன் இடத்துக்கு விடு, இன்னிக்கு நானா அவனான்னு ஒரு கை பார்க்கிறேன்” என உரும காவேரியோ

  

”அப்பா என்னப்பா வேணாம்பா விடுங்க”

  

”முடியாதும்மா இன்னிக்கு ஒண்ணு அவன் சாகனும் இல்லை நான் சாகனும்”

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.