”முறைப்பொண்ணா”
”ஆமாம்ணா உங்க மாமா சண்முகம் இருக்காரே அவரோட பொண்ணு உனக்கு முறைப்பொண்ணுதானே”
”அப்படியா ஓ அவருக்கு பொண்ணு இருக்குதா, நான் ஒரு நாளும் பார்த்ததில்லையே”
”நீ எந்த பொண்ணைதான் பார்த்திருக்க, உனக்காக இருக்கறவளையும் பார்க்க மாட்ட, உனக்காக உசுரு கொடுக்கறவளையும் பார்க்கமாட்ட, உன் உசுரை எடுக்க வர்றவளையாவது பாரு”
”என் உசுரை எடுக்கறவளா எங்க”
”அதோ அங்க” என காட்ட அப்போதுதான் கொம்பன் காவேரியை நேருக்கு நேராக பார்த்தான், மணப்பெண் கோலத்தில் அசத்தலாகவும் அதே சமயம் வீரமாகவும் நின்றிருந்தவளைக் கண்டு ஆச்சர்யப்பட்டான்.
காவேரியும் அவனை முதல் முதலாக பார்த்தாள், பார்த்த உடனே அவளுக்கு பிடிக்காமல் போனது, நாய்களுடன் பழகி பழகி அவனது உருவம் கரடுமுரடாக இருந்தது, நிறமோ காக்கைக்கு ஒத்து இருக்க அவளுக்கு வெறுப்பே வந்தது
”இந்த பேரழகனுக்காகவா நம்ம ஊர் பொண்ணுங்க நீ நான்னு போட்டி போட்டாங்க, ஒண்ணு நம்ம ஊர் பொண்ணுங்களுக்கு கண்ணுல கோளாறு இருக்கனும் இல்லைன்னா இவன் பொம்பளை பொறுக்கியா இருக்கனும்” என மனதில் நினைத்தபடியே அவனிடம் வந்தாள்.
அதே நேரத்தில்தான் மறுநாள் கொம்பன் சந்நியாசியாக துறவரம் ஏற்க போவதற்காக சில பல ஏற்பாடுகளை செய்ய ஆட்களை வரவழைத்திருந்தான், அதன்படி அவனை சந்நியாசியாக ஆக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்த ஒரு சாமியார் அவரது பக்கத்தில் எப்படியும் கொம்பன் சந்நியாசி ஆகிவிடுவான் அதனால் அவனுக்கென்று