(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

காரியத்தையும் நீ செய்ய மாட்டேன்னு எனக்குத் தெரியும், அந்த நம்பிக்கையிலதானே நான் இந்த கல்யாணத்தையே ஏற்பாடு செய்தேன்”

  

”உங்களுக்கு இவ்ளோ பிடிவாதம் ஆகாதுப்பா, எப்படியிருந்தாலும் இந்தக் கல்யாணம் நிக்கதான் போகுது, அதுக்கு பதிலா நீங்களே இதை நிறுத்திட்டா இருக்கற கொஞ்சம் மரியாதையையாவது காப்பாத்திக்கலாமே”

  

”இப்ப எனக்கு என்னோட மானம் மரியாதை பத்தியெல்லாம் கவலையில்லைம்மா, உன்னோட கல்யாணம்தான் எனக்கு முக்கியம்”

  

”நடக்காத கல்யாணத்தை பத்தி பேசி என்ன லாபம்”

  

”எனக்கு நம்பிக்கையிருக்கு, இந்த முறை நிச்சயம் இந்த கல்யாணம் நடக்கும்”

  

”எனக்கு நம்பிக்கையில்லை, வழக்கம் போல இந்த கல்யாணம் நிக்கதான் போகுதுப்பா”

  

”அப்படி நடக்க கூடாதுன்னுதான் நம்ம ஊரைவிட்டு 500 கி.மீ தள்ளியிருக்கற ஊர்ல உனக்கு சம்பந்தம் பேசினேன், இந்த கல்யாணத்தைப் பத்தி கூட நம்ம ஊர்பயலுக ஒருத்தனுக்கு கூட விசயம் தெரியாம பார்த்துக்கிட்டேன்”

  

”அட போங்கப்பா 500 கி.மீ என்ன நீங்க கடல் கடந்து வேற நாட்ல கல்யாணத்தை வைச்சாலும், அதை நிப்பாட்டறதுக்காகவே வருவாங்கப்பா”

  

”உன் பயம் எனக்கு புரியுதும்மா”“

  

”இல்லைப்பா உங்களுக்கு புரியாது இதுவரைக்கும் 6 முறை என் கல்யாணத்தை நிப்பாட்டியிருக்காங்க, இது ஏழாவது முறை, இந்த முறையும் என் கல்யாணம் அவனுங்களால நின்னா சத்தியமா சொல்றேன் என் உசுரை நான் விட்டுடுவேன்பா”

  

”அம்மாடி தங்கம் இப்படியெல்லாம் பேசாதம்மா, என் சாமி நீ, என்னை பெத்த அம்மாவே உன் உருவுல வந்ததா எண்ணி தினம் தினம் நான் சந்தோஷப்படுவேன். உன் உசுரை விட

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.