(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

உருப்புடுவானா அவன்”

  

”அப்பா அவரை திட்டி என்ன லாபம், நடக்கற விசயத்துக்கும் அவருக்கும் என்னப்பா சம்பந்தம், அவருக்கு நான் யார்ன்னு கூட தெரியாது, எனக்கும் அப்படித்தானே, ஊர்க்காரங்க அவர் மேல இருக்கற அன்புல இப்படியெல்லாம் நடந்துக்கறாங்க”

  

”அதுக்குன்னு கல்யாணமே வேணாம்னு பிரம்மச்சாரியாதான் வாழ்வேன், என் வாழ்க்கை சாமியார் வாழ்க்கைன்னு பேசிட்டு, இருக்கற சொத்தையெல்லாம் ஊர் மக்களுக்காக செலவு செய்துக்கிட்டு நாய்களை வளர்த்து அதுங்க கூடவே பொழுதை ஓட்டிகிட்டு இருக்கறவனை எப்படி நான் ஏத்துக்குவேன், உன் அம்மா இருந்தவரைக்கும் உன்னை எப்படியாவது கொம்பனுக்கு கல்யாணம் செய்து வைக்கனும்னு முயற்சி செய்தா ஆனா, அவன் என்ன செய்தான், கடைசி வரைக்கும் நான் யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு உறுதியா நின்னான், அதை தாங்க முடியாம உன் அம்மா போய் சேர்ந்துட்டா, அப்ப கூட அவன் மனசு மாறலையே, நாய்களை வளர்த்து வளர்த்து அவனுக்கும் நாய் புத்திதானே வரும், படுபாவி அவனும் வாழாம உன்னையும் வாழவிடாம செய்றானே, அவனை கொன்னாலும் தப்பில்லை, அவன் செத்தாதான் நிம்மதி, இன்னிக்கே அவனை வெட்டி கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போறேன்”

  

”அப்பா என்ன பேச்சு இது, நீங்க போயிட்டா அப்புறம் என்னோட நிலைமை”

  

”இல்லைம்மா அந்த கொம்பன் செத்தாலே உன் வாழ்க்கைக்கு நல்லது நடக்கும், அவனை நான் கொல்லாம விடமாட்டேன்”

  

”அவனை கொல்ல யாராலயும் முடியாதுப்பா, அவன் கொம்பன் காட்டு யானைக்கு சமமானவன்”

  

”இருக்கட்டுமே என் பொண்ணு வாழ்க்கைத்தான் எனக்கு முக்கியம்” என வீரமாக பேசியவர் உடனே தன் மகளை அழைத்துக் கொண்டு அக்கணமே அந்த ஊரைவிட்டு கிளம்பினார். காரில் செல்லும் போது கூட காவேரி தன் தந்தையிடம் அவரின் கோபத்தை குறைக்க பேசினாள், அவரை சமாதானமாக்க முயன்றாள், பலனில்லை, சண்முகம் ஒரு முடிவுடன் இருந்தார் ஒன்று கொம்பன் இருக்க வேண்டும் இல்லையென்றால் தான் இருக்க வேண்டும்,

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.