(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”அடடே வாப்பா சண்முகம் என்ன அப்படியே சிலையாட்டம் நின்னுட்ட அட நாங்க எப்படி இங்க வந்தோம்னு ஆச்சர்யமா இருக்கா, இங்க ஒரு வேலையா வந்தோம், வந்த வேலை சிறப்பா முடிஞ்சிடுச்சி அப்படியே கோயிலுக்கு போய் வந்துடலாம்னு நினைச்சி இங்க வந்தா வெளிய பேனர் இருந்தது, அதுல நம்ம காவேரிக்கு கல்யாணம்னு இருக்கவும் கையும் ஓடலை காலும் ஓடலை விறுவிறுன்னு வந்து சேர்ந்துட்டோம், உன்னை தேடினோம் கிடைக்கலை கடைசியில மாப்பிள்ளை குடும்பத்தை பார்த்து நாலு வார்த்தை நல்ல விதமா பேசிட்டுப் போகலாம்னு வந்தோம் வாப்பா வந்து உட்காரு வா வா” என அழைக்க சண்முகத்திற்கு தலையே சுழன்றது. மறுபடியும் தன் மகளின் திருமணத்திற்கு தடங்கல் வந்துவிட்டதே என எண்ணி வருந்தினாலும் சட்டென ஒரு விழிப்பு அவரிடம் தோன்றியது என்ன ஆனாலும் சரி இவர்களை விரட்டிவிட்டு கல்யாணத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கோபமாக வந்திருந்த ஊர்க்காரர்களுடன் தகராறு செய்து விரட்ட முனைந்தார்

  

”அழைக்காத இடத்தில வந்துட்டு உரிமை பாராட்டறீங்களா கிளம்புங்க இங்கிருந்து, உங்க சங்காத்தம் வேண்டாம்னுதானே நான் நம்ம ஊரை விட்டே இவ்ளோ தொலைவில கல்யாணத்தை ஏற்பாடு செய்தேன், இங்க வந்தும் இப்படி எங்க உசுரை வாங்கறீங்களே, தயவு செய்து கிளம்புங்க இல்லாட்டி நான் பொல்லாதவனாயிடுவேன் கிளம்புங்க” என கத்த வந்திருந்த ஊர்காரர்களுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது, அவமானத்தில் அவர்களுக்கு கோபம் தலைகேறி

  

”என்னப்பா சண்முகம் ஏதோ நம்ம ஊர் புள்ளைக்கு கல்யாணமாச்சேன்னு வந்தா இப்படியா விரட்டுவ இதெல்லாம் தப்பு திரும்பி நீ நம்ம ஊர்க்குதானே வரனும்”

  

”இந்த மிரட்டல் எல்லாம் நான் நிறைய பார்த்துட்டேன், இந்த முறையாவது என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகனும்னு முடிவு பண்ணிட்டேன், நீங்க இருந்தா அவள் கல்யாணம் நடக்காது கிளம்புங்க இங்கிருந்து” என விரட்ட அவர்களோ அசையவில்லை

  

”நல்லாயிருக்கே கதை, கையில வெண்ணையை வைச்சிக்கிட்டு எவனோ ஒருத்தன் நெய்க்கு அலைஞ்சானாம் அப்படியிருக்கு உன் கதை, ஏன் உன் பொண்ணுக்கு முறை

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.