(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

எனக்கு எதுமா பெரிசு”

  

”அப்படின்னா உடனே இந்த கல்யாணத்தை நிப்பாட்டுங்க, தானா நிக்கறதை விட நாமளே நிறுத்தறது எவ்வளவோ மேல்”

  

“பொறும்மா இந்த முறை எந்த கெடுதலும் நடக்காது, பார்க்கலாம் முகூர்த்த நேரம் கூட நெருங்கிடுச்சி, தாலி கட்ட இன்னும் அரை மணி நேரம்தான் இருக்குது உன் கழுத்துல தாலி ஏறிட்டா போதும் அதுக்கு அப்புறம் எந்த கொம்பனாலயும் எதையும் செய்ய முடியாதும்மா”

  

என சொல்ல அவளுக்கு இளப்பமாக இருந்தது உச் கொட்டினாள்

  

”ஏன்மா அலுத்துக்கற”

  

”கொம்பனால வந்த பிரச்சனைப்பா இது, யாராலயும் மாத்த முடியாது, நீங்களும் பிடிவாதமா ஒவ்வொரு முறையும் ஊரை பகைச்சிக்கிட்டு எனக்கு கல்யாணம் செய்யப் பார்க்கறீங்க ஆனா, இப்ப கூட எனக்கு ஒரு துளியும் நம்பிக்கை வரமாட்டேங்குது”

  

”இந்த முறை நிச்சயம் உன் கல்யாணம் நடக்கும், நடக்கலைன்னா உன் அப்பன் செத்ததுக்கு சமம்” என வீராவேசமாக பேசிவிட துடித்துப் போனாள் காவேரி

  

”அப்பா” என அலற அவரோ அதை கண்டுக் கொள்ளாமல் கல்யாண வேலைகளை கவனிக்கச் சென்றார். அவளுக்கு இரு மனதாக இருந்தது, தந்தையின் பேச்சு அவளை திக்குமுக்காட வைத்தது. எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாதென கடவுளை வேண்டினாள், பேதை பெண் வேண்டுவதை தவிர அவளால் என்ன செய்திட முடியும்

  

மேடையில் மணமகன் இன்னும் வரவில்லை, என்னவென பார்க்க சென்ற சண்முகத்திற்கு பெரிய அதிர்ச்சி அங்கு மணமகன் மற்றும் அவரின் குடும்பத்தினருடன் சண்முகத்தின் ஊரார் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள், அவர்களைக் கண்டதும் அவரின் நெஞ்சு அடைத்தது, கண்கள் கலங்கியது போச்சே என்ற எண்ணம் உள்ளே தோண்ற சிலையாகி நின்றார், அவர் வந்ததைக் கண்டதும் ஊர்காரன் ஒருவர்

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.