(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”டயர்டா இருக்கு போய் ஜுஸ் கொண்டு வா போ” என அதிகாரம் செய்ய அவனோ

  

”நானா உனக்கு ஜுஸ் கொண்டு வரனுமா முடியாது போ உனக்கு வேணும்னா நீயே போய் குடி”

  

”அப்போ நீ கொண்டுவரமாட்ட அப்படித்தானே” என அவனை நெருங்கி நின்று கேட்க அவனோ தடுமாறி பின்னால் 4 அடி எடுத்து வைத்து

  

”ஆமாம்” என உதறலுடன் சொல்லி வைக்க அவளோ

  

”அத்தை மாமா” என சத்தமாக அழைத்தாள் அதில் அவனுக்கு அச்சம் எழுந்தது, அவள் கத்தியதும் கொம்பனின் தந்தையும் தாயும் ஒருசேர வந்து நின்றார்கள்

  

”என்னம்மா என்னாச்சி ஏன்மா கத்தற”

  

”பாருங்க மாமா ரொம்ப களைப்பா இருக்கு, தொண்டை வத்திப்போச்சி, தாகமா இருக்கு, ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வந்து கொடுங்கன்னு உங்க புள்ள கிட்ட கேட்டா முடியாதுங்கறாரு, இது நியாயமா சொல்லுங்க அத்தை” என சொல்ல கொம்பனுக்கு இப்போது பிபி எகிறியது.

  

அவனது தந்தையோ

  

”ஏன்டா நான்தான் அப்பவே சொன்னேன்ல, அவளுக்கு ஜுஸ் கொண்டு போய் கொடுன்னு, சொல்றதை செய்ய மாட்டியா நீ” என அதட்ட அவனது தாயோ

  

”ஏன்டா இப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்தற பாவம் தாகம் எடுக்கற பொண்ணுக்கு தண்ணீர் கூட கொடுக்க மனசில்லை அந்தளவுக்கா உன் மனசு கல் மனசாயிடுச்சி அந்த மனசுல ஈரம் கூடவா இல்லை சே இதுல நீ சிவனுக்கு தொண்டாற்றப்போறேன்னு சொன்ன, நீ நடந்துக்கறதை பார்த்தா அந்த ஈசன்கூட மன்னிக்க மாட்டாரு, பாவம்டா அந்த பொண்ணு, உன்னை நம்பி கழுத்தை நீட்டியிருக்கா அவளுக்கு 3 வேளை கஞ்சி

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.