(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

ஊத்தகூடவா உன்னால முடியாது அந்தளவுக்கு கையாலாகாதவனா நீ” என அடுக்கிக் கொண்டே போக இரு கைகளையும் கூப்பி நின்றான் கொம்பன்

  

”அம்மா தாயே மன்னிச்சிடு போ போய் ஜுஸ் போடு, நான் வந்து அதை கொண்டு போய் இவளுக்கு தரேன்” என வெறுப்பாகச் சொல்ல அதற்கு அவனது தந்தையோ

  

”ஏன்டா பெத்த அம்மாவை இப்படி வேலை வாங்கற, அவளை நான் மகாராணி போல உள்ளங்கையில வைச்சி தாங்கறேன், நீ என்னடான்னா அவளை வேலை வாங்கற, ஏன் நீ இங்க என்ன செய்ற வெட்டியாதானே இருக்க, நீயே போய் ஜுஸ் போட்டு உன் பொண்டாட்டிக்கு கொண்டு போய் கொடு போ” என அதட்ட அவனுக்கு கோபமும் வெறுப்பும் வந்தது சிடுசிடுவென முகத்தை வைத்துக் கொண்டு ஜுஸ் போட சென்றான் அவன் சென்றதும் கொம்பனின் தாயும் தந்தையும் காவேரியிடம்

  

”அம்மாடி காவேரி தப்பா எடுத்துக்காதம்மா, ஒரே புள்ளைன்னு செல்லமா வளர்த்துட்டோம், அதான் இப்படி நடந்துக்கறான், மத்தபடி அவனை போல பொறுப்பானவனை பார்க்கவே முடியாது, இப்பதானே கல்யாணம் ஆயிருக்கு முன்ன பின்ன அனுபவம் இல்லைல்ல, அதான் இப்படி நடந்துக்கறான் போக போக உனக்கு ஏத்தமாதிரி நடந்துக்குவான்மா, கொஞ்சம் அவனுக்காக சில விசயங்களை விட்டுக் கொடும்மா பாவம்ல”

  

”அப்போ நான் பாவம் இல்லையா அத்தை அம்மா இல்லாத பொண்ணு நானு, அம்மாவோட பாசத்தை கூட நான் மறந்துட்டேன் எனக்கு வரப்போறவருதான் அம்மாவை போல பாசத்தை தருவாருன்னு நினைச்சேன் ஆனா, உங்க பையன் அப்படியில்லையே நான் ஏமாந்துட்டேன்“

  

”அய்யோ அப்படி சொல்லாதம்மா, என் புள்ளை பாசக்காரன்தான் திடுதிப்புன்னு கல்யாணம் ஆனதால கொஞ்சம் பதட்டமா இருக்கான், கல்யாண வாழ்க்கைன்னாலே பயம் இருக்கதானே செய்யும், நாள் போக போக அவன் தன்னால உன் வழிக்கு வந்துடுவான், எல்லாம் நான் அவன்கிட்ட சொல்லிட்டேன், உன்கூட அனுசரிச்சிப் போகச் சொல்லி, நீ எதுக்கும் கவலைப்படாதம்மா உன்னை அவன் மகாராணி போல பார்த்துக்குவான், அவனை கண்கலங்காம வைச்சி பார்த்துக்கம்மா” என சொல்ல அவளும் சரியென தலையாட்ட ஜுஸ்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.