(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”ஆம்பளைதான் முதல்ல ஊட்டனும் நீ வாய் திற”

  

”தப்பும்மா இது என் வீடு இங்க நான் சொல்றதுதான் நடக்கும், அதோட இந்த பாலு பழம் கூட எங்க வீட்டுது, அதனால நீதான் வாய் திறக்கனும் சமத்துபிள்ளை இல்லை எங்கே ஆ காட்டு ஆஆஆஆ” என சொல்ல அவனுக்கு கடுப்பாக இருந்தது,  அவன் வாய் திறக்காமல் தம்கட்டி அமர அவனின் தந்தை எதற்குமே தன் செல்ல மகனை ஒரு வார்த்தை கடிந்து பேசியதில்லை செல்லமாக அடித்ததும் இல்லை ஆனால் இன்று பட்டென்ற ஒரு சத்தம் கொம்பன் தனது தோளை வலியில் தடவிக் கொண்டே தன் தந்தையை விசித்திரமாக பார்த்து

  

”அப்பா நீயா இது”

  

”படவா என்ன பிடிவாதம் உன்னோடது, வருஷக்கணக்கா பார்க்கிறேன் நீ நினைச்சதுதான் நடக்கனுமா என்ன? இப்படி உன்னை செல்லம் கொடுத்து கெடுத்ததாலயே நீ சந்நியாசி ஆகப் போறேன்னு பிடிவாதம் பிடிச்சப்ப எங்களால வருத்தப்பட முடிஞ்சதே தவிர வேற எதையும் செய்ய முடியலை ஆனா, இப்ப அப்படியில்லை ஒழுங்கு மரியாதையா குடும்பம் நடத்தற வழியை பாரு ஆ காட்டு வாயை திற”

  

”அப்பா முதல்ல அவள்தான் வாய் திறக்கனும்”

  

”பரவாயில்லை நீதான் திறயேன், குறைஞ்சா போயிடப் போற திற” என அவனின் தாய் மிரட்ட அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது, காவேரியோ அவனைப் பார்த்து இளப்பமாக சிரித்தாள் வேறு வழியின்றி ஆஆ என வாய் திறந்தான் காவேரியும் அவனுக்கு பால் பழம் புகட்டிவிட்டு தானாக வாய் திறந்து

  

”ஆஆ” என்றாள் அவனோ வேண்டா வெறுப்பாக அவளின் வாயில் பாலையும் பழத்தையும் திணிக்க அவள் திக்குமுக்காடிப் போய் திணற அதில் அனைவரின் வெறுப்பும் கொம்பன் மீது விழ அவனோ நிலைகுலைந்துப் போனான்.

  

அடுத்து அவளது வீடு என்பதால் அவள் பாட்டுக்கு எழுந்து தன் அறைக்குச் சென்றாள், நாள்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.