(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

“தப்புடா தப்பு இது அவள் வீடு, அவளை எப்படி வேலை வாங்கறது, அவளே பாவம் நடந்த விசயங்களால ரொம்ப களைச்சிப் போயிட்டா நான்தான் அவளை போய் ஓய்வெடுக்க சொன்னேன்”

  

”ம்க்கும் அவள் செஞ்ச வேலைக்கு ஓய்வு ஒண்ணுதான் கேடு”

  

”டேய் நீ போடா எனக்கு வேலையிருக்கு நீயிருந்தா என் வேலையே கெடும் போ” என விரட்டிவிட்டு தொடர்ந்து சமையல் வேலையை செய்ய அவனோ நொந்துப் போய் தந்தையிடம் சென்றான்.

  

கொம்பனுக்கு திருமணம் என்றால் கண்டிப்பாக ஊரே வந்திருக்கும், இப்படி ஊருக்கே தெரியாமல் திருமணம் ஆனதால் ஊர்க்காரங்கள் கோபித்துக் கொண்டு சகட்டு மேனிக்கு கேள்விகளை அடுக்க அதற்கு தக்க பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார், அவனது தந்தை அதைக் கண்டு கோபமடைந்த கொம்பனோ ஊர்க்காரர்களைப் பார்த்து

  

”எல்லாம் உங்களால வந்தது, உங்களுக்கு நான் நல்லது செய்தா எனக்கு நீங்க இப்படியா கெடுதல் செய்யனும், நான் கேட்டனா எனக்கு கல்யாணம் ஆகனும்னு, எதுக்காக என் முறைபொண்ணுக்கு நடக்க இருந்த கல்யாணத்தை நிப்பாட்டி என்னை இப்படி மாட்டி விட்டீங்க”

  

”தம்பி நீ சந்நியாசியாகி எங்களை விட்டு போயிடக்கூடாதுன்னுதான் இப்படி எல்லாம் நாங்க செய்தோம், சரி விடுப்பா நடந்தது நடந்துப் போச்சி, இனிமே நீ உன் பொண்டாட்டியோட அனுசரிச்சி நடந்துக்கப்பா” என ஒருவர் சொல்ல கடுப்பானான் கொம்பன்

  

”அப்பா என்னப்பா இவங்க இப்படி பேசறாங்க நான் ஏன் அனுசரிச்சி போகனும்”

  

”போதும்டா உன்னால வந்த வினை உன்னாலதானே அவளுக்கு பல கஷ்டம் வந்தது அப்ப அதை நீதான் சரியாக்கனும், ஏன் அவள்கூட அனுசரிச்சி போனா என்ன தப்பு”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.