(Reading time: 24 - 48 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

முறையா நான் தோய்க்கறதே இந்த துணியைதான் ரொம்ப கொடுமையா இருக்கு”

  

”சரி விடு நண்பா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கொடுப்பினை, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் நண்பா, உனக்கு இப்படி வரம் அமைஞ்சிருக்கு என்ன செய்றது ஆனா இந்த விசயத்தில உன் முறைபொண்ணு அதிர்ஷ்டக்காரியப்பா”

  

”எதை வைச்சி சொல்ற“

  

”பின்ன உன்னை போல ஒரு புருஷன் அவளுக்கு கிடைச்சிருக்கானே, உண்மையை சொன்னா அவளுக்குதான் கொடுப்பினை இருந்திருக்கு, கணவன் அமைவதெல்லாம் கூட இறைவன் கொடுத்த வரம் போல உனக்கு அதிர்ஷ்டம் அடிக்கலை அவளுக்கு அடிச்சிருக்கு பாரேன் ஆச்சர்யமா இல்லை”

  

”அடப்போடா இன்னிக்கு ஒரே நாள்ல என் வாழ்க்கையே மாறிடுச்சி, சந்நியாசியா ஆயிருந்தா கூட நான் இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்”

  

”ப்ச் என்ன செய்றது உன் தலையெழுத்து இப்படி, நைட்டி தோய்க்கனும்னு இருக்கு சரி சரி துணியை அலசி ஆறப்போடு”

  

”போடா என்னால முடியாது”

  

“இப்படியே விட்டா துணி கெட்டுடும், ஆனது ஆச்சி துணி தோய்க்கற அளவுக்கு வந்துட்ட, அப்படியே அதை அலசி காய வைக்கறதையும் கத்துக்கப்பா, செய் செய் தண்ணியை வைச்சிருக்கேன் அதுல முக்கி எடு சோப்பு நுரை போகட்டும்” என சொல்ல கொம்பனோ எழுந்து நின்று தனது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டான், அதைக்கண்ட கணக்குபிள்ளையோ

  

”இப்ப எதுக்கு சண்டைக்கு போறவனை போல தயாராகற துணியைதானே அலசனும் அதுக்கு எதுக்கு இந்த வீராப்பு”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.