அவர்களுக்கும் இது அவமானம்தானே அந்நேரம் கணக்கு பிள்ளை வர அவனை பிடித்து உலுக்கி கேட்க அவன் உண்மையை உளற கொம்பனின் பெற்றோரோ கொம்பனை தேடிச் சென்றார்கள்.
அவனது அறையில் உறங்கிக் கொண்டிருக்க அவனது தந்தை ஒரு கம்பால் அவனை அடித்து எழுப்பினார் அதில் அவனும் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்து
”என்னாச்சி ஏன் அடிக்கறீங்கப்பா” என கேட்க அவரோ
”எங்க மானத்தையே வாங்கிட்டியேடா பாவி இப்படியா நடுராத்திரியில வீட்டை விட்டு ஓடிவருவ”
”வீடாப்பா அது அங்க என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலை எனக்கு இங்க இருக்கதான் பிடிச்சிருக்கு”
”இதப்பாரு உனக்கு கல்யாணம் ஆயிடுச்சி இனிமேல நீ இருக்க வேண்டிய இடம் இது இல்லை அங்கதான்”
”ஆனா அப்பா“
”பேசாதடா”
”இல்லைப்பா அங்க இருக்காளே ஒருத்தி அவள் என்ன செய்தாள் தெரியுமா என் நெஞ்சில எட்டி உதைக்கறாப்பா“
”உதைக்கற மாதிரி நீ என்னடா தப்பு செய்த”
”என்னையே சொல்லாதீங்கம்மா பாருங்க என் கழுத்தை அவளை நான் தொட்டேன்னு கழுத்தை அருவாளால கீறிட்டா இதப்பாருங்க கையிலயும் காயம் எல்லாம் அவளால வந்தது“