(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”என்னால முடியலை தலையில தண்ணி ஊத்தியும் உடம்பு சூடு அடங்கலை என்னை ஏத்துக்க காலம் முழுக்க உனக்கு அடிமையா நான் இருக்கேன் என்னை ஏத்துக்க” என சொல்லி அவளின் பாதத்தை பிடித்தான் அவளுக்கு வெறுப்பே வந்தது அப்படியே ஒரு உதை விட்டாள் அவனது நெஞ்சில் பாதம் பதிந்து அவன் சற்று தள்ளிப் போனான். அவ்வளவுதான் அவனுக்குள் மோகம் கலைந்து கோபம் குடிகொண்டது

  

”ராட்சஸி எட்டியா உதைக்கற இரு இரு இப்ப உன்னோட நேரம் ஓடுது, ஆடிப்பாடு எனக்கான நேரம் வரும் போது இந்த கொம்பன் யாருன்னு நீ தெரிஞ்சிக்குவ” என கர்ஜித்துவிட்டு அந்த அறையை விட்டே சென்றுவிட்டான், அவன் சென்றதும் கண்கள் திறந்துப் பார்த்தாள் காவேரி யாரும் இல்லை என ஊர்ஜிதம் ஆனதும் அவசர அவசரமாக அறைக்கதவை சாத்தி தாள்பாள் போட்டுவிட்டு படுக்கையில் வந்து அமர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

  

காவேரியின் வீட்டை விட்டு அர்த்த ராத்திரியில் வெளியே வந்த கொம்பன் நேராக சென்றது அவனது வீட்டிற்குதான் அவனது அறையில் சென்று முடங்கினான். நீண்ட நேரம் உறக்கம் வராமல் தவித்து பின் தன்னால் உறக்கம் வர உறங்கிப் போனான்.

  

மறுநாள் பொழுது விடிந்தது காவேரி தன் அறையை விட்டு வெளியே வர அங்கு அவளது தந்தை, மாமனார், மாமியார் அனைவரும் ஆவலாக காத்திருந்தார்கள் வந்தவள் சுற்றி முற்றி பார்த்துவிட்டு

  

”கொம்பன் எங்க” என கேட்க அவர்கள் திடுக்கிட்டார்கள்

  

”அவன் உன்கூடதானே இருந்தான்”

  

”இல்லையே நைட்டே அவர் ரூமை விட்டு வெளிய போயிட்டாரு” என சொல்ல சண்முகம் மனம் உடைந்துப் போனார், கண்கள் கலங்கினார்

  

”தப்பு பண்ணிட்டேன் நான் பெரிய தப்பு செய்துட்டேன் என் பொண்ணு வாழ்க்கை இப்படியா சீரழியனும்” என புலம்ப அவருக்கு ஆறுதல் சொன்னார்கள் கொம்பனின் பெற்றோர்கள்,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.