(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

பார்வை பார்த்துவிட்டு எழுந்து அறையை விட்டு வெளியேறியவன் நேராக சென்றது சமையலறைக்குதான், அங்கு அவனது தாய் காலை நேர சிற்றுண்டிக்கான வேலையில் இறங்கியிருக்க அவனாக காபி போடலானான்

  

”யாருக்குடா காபி” என கேட்க அவனோ

  

”உன் மருமகளுக்கு”

  

”இப்படிதான் பொறுப்பா இருக்கனும், அவள் மனசு நோகாம நடந்துக்க தன்னால அவளே உன்னை ஏத்துக்குவா, அதுக்கு அப்புறம் நீ அவள்கூட வாழு, யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க புரியுதா”

  

”ம்ம்” என சொல்லியவன் டம்ளரை பிடிக்க போக சூடுபட்ட கை வலி எடுக்க அதில் அவன் ஆஆ என அலற அவனது தாயோ பதறினார்

  

”என்னடா என்னாச்சி“

  

”ஒண்ணுமில்லைம்மா சூடு பட்ட கையால பாத்திரத்தை பிடிச்சேன் வலிக்குது”

  

”பார்த்துடா பக்குமா செய்” என சொல்ல அவனும் சரியென தலையாட்டிவிட்டு காபியை போட்டுக் கொண்டு போனான். காவேரியோ குழம்பினாள்

  

”சே அவனுக்கு நம்ம மேல வெறுப்பு அதிகமாயிடுச்சி போல, பாவம் காபி தரலாம்னு பார்த்தா பதிலே சொல்லாம எழுந்து போனா எப்படியாம் நாமளும் ஓவரா நடந்துக்கிட்டோமா என்ன ப்ச்” என உள்ளுக்குள் புலம்ப அந்நேரம் காபியுடன் வந்த கொம்பனா

  

”இந்தா முறைப்பொண்ணே காபி” என நீட்ட அவளோ ஆச்சர்யப்பட்டாள்

  

”எனக்கா காபி”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.