(Reading time: 34 - 68 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”இரண்டும்தான்”

  

”ஏன் அவங்க இங்க இருந்தா உனக்கென்ன கஷ்டம் அவங்க இருக்கறது உனக்கு நல்லதுதானே“

  

”இருந்தாலும் எங்கம்மா சமையல்கட்டுல கஷ்டப்படறதையும் எங்கப்பா தனியாளா உங்க சொத்துக்களையும் அவரோட சொத்துக்களையும் பார்த்துக்கறதும் போதும் பாவம் அவங்களுக்கு வயசாயிடுச்சி”

  

”அதான் அவங்க பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சே, அதுவே அவங்களுக்கு பெரிய பாரம் இறங்கின மாதிரியிருக்கும், எங்க நீ சந்நியாசி ஆயிடுவியோன்னு வயித்தில நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தாங்க இப்ப நிம்மதியா இருக்காங்க போதாதா“

  

”ஆமாம் ஆமாம் இருந்தாலும் அவங்க இங்க இருந்தே ஆகனுமா ஊர் தப்பா பேசாது”

  

”ம் நீ சொல்றதும் சரிதான் ஆனா எனக்கு ஒரு சந்தேகம்”

  

”என்ன”

  

”அவங்களை அனுப்பிட்டு அடிக்கடி அவங்களை பார்த்துட்டு வரேன்ங்கற சாக்குல அங்கயே போய் தங்கிடலாம்னு நினைப்பு இருந்தா அதை அடியோட அழிச்சிடு சரியா”

  

”அய்யோ அப்படி எந்த எண்ணமும் எனக்கில்லை, எனக்கு இந்த வீடுதானே நிரந்தரம் அப்படியிருக்கறப்ப நான் ஏன் அங்க போய் தங்கப் போறேன், சாகறவரைக்கும் இதுதான் இந்த வீடுதான் எனக்கு கோவில்”

  

”அப்ப நானு”

  

”நீ என் தெய்வம் போதுமா”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.