”நீயா வேணாம் எனக்கே எல்லாம் தெரியும் நான் பார்த்துக்கிறேன்”
”உன்னை நம்பி எல்லாத்தையும் விடமுடியாது, நீ வேணும்னே சொதப்பி எங்களுக்கு நஷ்டத்தை உண்டாக்குவ, வா வா நீ எப்படி வேலை செய்றன்னு நானும் பார்க்கிறேன் கிளம்பு” என சொல்ல கணக்குபிள்ளையும் உடன் வர அவளோ முறைத்தாள்
”நீ என்ன கூடகூட வர்ற”
“இல்லை கொம்பனுக்கு துணையா”
”அதான் நான் இருக்கேன்ல எங்கப்பா தனியா வீட்ல இருக்காரு, வேணும்னா அவருக்கு துணையா நீ இங்கயே இரு நாங்க மட்டும் போய் வரோம்“
”இல்லை கொம்பன் புதுசு ஏதாவது சொதப்பினா அவனை திட்டிடாதீங்க பாவம்”
”எல்லாம் எனக்குத் தெரியும் நீ ஒண்ணும் எனக்கு அறிவுரை சொல்ல வேணாம்”
”இல்லை ஒரு பேச்சுக்கு”
”போதும்” என அவனை அடக்கிவிட்டு கொம்பனை பார்த்து
”போலாமா” என அழைக்க அவனும் விதியே என வெறுப்பாக தலையாட்டிவிட்டு அவளுடன் புறப்பட்டான்.
அவர்களுக்கு என இருந்த தோப்புகளை சுற்றி காட்டி, எப்படி வேலை வாங்குவது, என்ன செய்வது, என்பதையும் விளக்கமாகச் சொல்ல சொல்ல அவனும் கவனமாக கேட்டுக் கொண்டே வந்தான், இதற்கே மதியம் ஆகிவிட ஓய்ந்தேப் போனான் கொம்பன், இருவரும் ஆபிஸ் அறையில் வந்து சேர்ந்தார்கள், அவன் சோர்வாக இருப்பதைக்கண்ட காவேரியோ
”இதுக்கே சோர்ந்துப் போனா எப்படியாம்”