(Reading time: 29 - 57 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 08 - சசிரேகா

றுநாள் காலையில் காவேரி கொம்பனை தேட அவனோ வீட்டில் இல்லாமல் போகவே குழம்பினாள். தன் தந்தையிடம் கேட்க எண்ணி வந்தாள்.

  

”அப்பா அப்பா” என அழைக்க அவரும்

  

”நான் இங்க இருக்கேன் வாம்மா” என சொல்ல அவளும் அவரை தேடிச் சென்று பேசினாள்

  

”அப்பா கொம்பன் எங்கப்பா வீடு முழுக்க தேடிட்டேன் ஆளையே காணலையே”

  

”ஓ அதுவா காலையிலயே தோப்புக்கு தண்ணி விடனும்னு சொன்னேன் சரின்னு விடிகாலையிலேயே கிளம்பிட்டாப்புல”

  

”ஓஹோ பரவாயில்லையே இவ்ளோ பொறுப்பா இருக்கானே”

  

”அவனுக்கென்னம்மா ராஜா மாதிரி வாழ்ந்தான் நீ என்னடான்னா அவனை வேலைக்காரன் போல வேலை வாங்கற பாவம்மா”

  

“அப்போ நான் பாவம் இல்லையாப்பா, எனக்கு நடந்ததை மறந்துட்டீங்களா எத்தனை அவமானம் எத்தனை கஷ்டம் நான் பட்டது கொஞ்சமா நஞ்சமா சொல்லுங்கப்பா”

  

“சரிம்மா சரி நான் எதுவும் சொல்லலை நீயும் கஷ்டப்பட்ட ஒத்துக்கறேன் அதுக்காக மாப்பிள்ளையை பழிவாங்கனுமான்னுதான் பார்க்கிறேன்”

  

”பின்ன யாரை பழிவாங்க சொல்றீங்க அவராலதானே என் வாழ்க்கை தடம்புரண்டது”

  

”தப்பும்மா மாப்பிள்ளையால இல்லை இந்த ஊர்க்காரங்களால, மாப்பிள்ளை ஊர்காரங்களுக்கு நல்லது செய்யப் போகதானே பதிலுக்கு மாப்பிள்ளைக்கு நல்லது செய்யனும்னு நினைச்சி உனக்கு நடக்க இருந்த கல்யாணத்தை நிப்பாட்டினாங்க, தப்பு ஊர்க்காரங்க மேலயே தவிர மாப்பிள்ளை மேல இல்லை புரியுதா, நீ பழிவாங்கனும்னா இந்த ஊர்க்காரங்களை பழிவாங்கு, அவரும் உனக்கு நடந்த அநீதிக்காக குற்ற உணர்ச்சியில

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.