(Reading time: 29 - 57 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

அவளோட என்னால நிம்மதியா வாழமுடியலை, எனக்கு அங்க போக பிடிக்கலைம்மா நான் உங்களோட வந்துடறேன், என்னை கூட்டிட்டுப் போங்க” என சொல்ல அவர்கள் கேட்கவில்லை

  

”அவள்தான் உன் பொண்டாட்டி அவளோட பிரச்சனை என்னன்னு பார்த்து தீர்த்து வைச்சி அவளோட வாழப்பாரு, அதை விட்டுட்டு அவளை பத்தி இப்படி நாலு பேரு முன்னாடி தப்பா பேசறியே நீ ஒரு ஆம்பளையா”

  

”அப்பா” என அலறினான்

  

”நிறுத்துடா எந்த வீட்லதான் பிரச்சனையில்லை, புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் பிரச்சனைகள் வரும், அதை நாலு சுவத்துல பேசி தீர்த்துக்கனுமே தவிர இப்படி பொண்டாட்டியோட பிரச்சனை வந்ததும் ஓடி அம்மா வீட்டுக்கு வந்துடக்கூடாது, இதுவாடா உன்னோட வீரம், கோழை போல நடந்துக்கற, நாங்க உன்னை வீரமா வளர்த்தோம்னு நினைச்சோம் ஆனா நீ அப்படியா இருக்க, ஊர் பிரச்சனையை சொடுக்கு போடற நேரத்தில தீர்க்க முடிஞ்ச உன்னால உன் வீட்டு பிரச்சனையை தீர்க்க முடியாதா என்ன

  

அவ்ளோ கஷ்டம் இல்லையே உன்னால முடியும், ஆனா நீ செய்ய கூடாதுங்கற திமிருல இருக்க, இதப்பாருடா எங்களை நீ மதிக்கறது உண்மைன்னா முதல்ல உன் வீட்டு பிரச்சனையை தீர்க்கற வழியை பாரு, அடுத்த முறை உன் பொண்டாட்டி வரும் போது கூட நீயும் இருக்கனும், இன்னிக்கு அவள் தனியா வந்து நின்னப்ப எங்களுக்கு மானமே போயிடுச்சி, நமக்கெல்லாம் மானம்தான்டா பெரிசு அது போச்சின்னா உசுரோட இருந்து என்ன பிரயோசனம் சொல்லு”

  

”என்னை மன்னிச்சிடுங்கப்பா இதுக்கு அப்புறம் நான் ஒழுங்கா இருக்கேன்”

  

”கிளம்பு நிக்காத நேரா வீட்டுக்குப் போகனும், சும்மா தொட்டதுக்கெல்லாம் அங்க கோச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு வந்துடலாம்ங்கற நினைப்பை இத்தோட மறந்துடு, அப்படியே நீ வந்தாலும் நாங்க உன்னை சேர்க்க மாட்டோம், ஊர்க்காரங்களும் உன்னை சேர்க்க மாட்டாங்க, நீ எங்க இருக்கனுமோ அங்க இருந்தாதான் மதிப்பும் மரியாதையும் நிலைக்கும், உனக்கிருக்கற நல்லபேரை கெட்ட பேராக்கிடாத, உன் பொண்டாட்டியோட

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.